பொது செய்தி

இந்தியா

தவறான 'ஆதார்' விபரம்: ரூ.10,000 அபராதம்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ஆதார், அபராதம், வருமான வரித்துறை

புதுடில்லி: 'வருமான வரி கணக்கு தாக்கலின் போது, 'ஆதார்' விபரங்களை தவறாக அளித்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

இது பற்றி, வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, பான் எண்ணுக்கு பதிலாக, ஆதார் எண்ணை குறிப்பிட்டும் தாக்கல் செய்யலாம் என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஆனால், ஆதார் விபரங்கள் தவறாக இருந்தால், அதற்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு, பான் விபரங்கள் தவறாக இருந்தால் மட்டும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது இது, ஆதார் எண்ணுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.






பான் அல்லது ஆதார் எண் விபரங்களை பெறாத, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கும், அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், வரி செலுத்துவோர், இரண்டு இடங்களில் ஆதார் விபரங்களை தவறாக அளித்திருந்தால், அதற்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
13-நவ-201911:28:49 IST Report Abuse
Sathiamoorthy.V ஒத்துக்கொள்கிறோம். வேண்டுமென்றே ஆதார் கார்டுகளில் வரும் பிழைகளையும் பெயர்களை தப்பு தப்பாக மொழி பெயர்க்கும் மென் பொருட்களை வைத்து எங்கள் உயிரை எடுக்கிறீர்களே அதற்கு எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க ஏற்பாடு செய்யவும். மேலும் உறவுகளை மதிக்காமல் C/O என போடுகிறார்களே இது என்ன முறை. அதிகார வெறி. கணவன், தந்தை என போட்டால் கம்ப்யூட்டர் வேலை செய்யாதா? இன்னார் மனைவி, இன்னார் மகன் என்ற அடையாளத்திற்கு தாலுக்கா ஆபிஸ் போன்ற இடங்களுக்கு அலைந்து லஞ்சம் கொடுக்க வேண்டுமா ? கூட்டு களவாணிகள் .
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-நவ-201908:31:47 IST Report Abuse
ஆரூர் ரங் வரிஏய்ப்புக்காக ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண் வைத்திருப்போர் உண்டு பல கள்ளககுடியேறிகளும் ஆதார் அட்டை வாங்கிவிட்டனர் . ஊழியர்களின் பெயரில் வாங்கிக்கணக்குகளைதுவக்கிவிட்டு அதன்மூலம் பினாமி வணிக கொடுக்கல் வாங்கல்களை நடத்துவோரும் அதிகம் .இது கொஞ்சநஞ்ச பேர் என்றால் அரசு கட்டுப்படுத்தமுடியும். ஆனால் கோடி பேர் வரை தேறும் போலிருக்கிறது .தேசபக்தியின்றி மக்களை விட்டுவைத்ததன் பலன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X