பொது செய்தி

இந்தியா

வாய் திறக்குமா சீனா?

Added : நவ 13, 2019 | கருத்துகள் (5)
Advertisement

பீஜிங்: நம் அண்டை நாடான பாக்., தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது; இந்தியாவில் தாக்குதல் நடத்தும்படி துாண்டி வருகிறது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தியா - பாக்., இடையேயான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. பாக்., பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தீவிரமாக உள்ளது.

'பாக்., பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்' என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உட்பட பல நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், அப்போதெல்லாம் பாக்.,குக்கு ஆதரவாக, சீனா செயல்பட்டது.சீன அதிபர் ஸீ ஜின்பிங், சமீபத்தில், தமிழகத்தின் மாமல்லபுரம் வந்திருந்தார்.

அப்போதும், அவரிடம் பிரதமர் மோடி, பயங்கரவாத பிரச்னைகள் குறித்து பேசியதாக தெரிகிறது. ஆனால், அது தொடர்பாக ஜின்பிங் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.சர்வதேச அமைப்புகளில் பேசும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பயங்கரவாதத்தை தடுப்பது குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.தற்போது பிரிக்ஸ் மாநாட்டிலும் இந்தப் பிரச்னையை எழுப்ப மோடி திட்டமிட்டுள்ளார். இனியாவது, சீனா வாயைத் திறக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
13-நவ-201916:36:37 IST Report Abuse
Girija மூணு நாள் வந்து தங்கி சோறு தின்னுட்டு, ஊருக்கு போய் சேர்ந்ததுக்கு ஒரு லெட்டர் கூட போடாத மனுஷன், கிறிஸ்மஸ் க்கு கேக்கு வாங்கி அனுப்புவாராம், பிளேட்டோட உக்காருங்க .
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-நவ-201914:00:37 IST Report Abuse
தமிழ்வேல் இது தெரிந்தது தானே..
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
13-நவ-201910:39:00 IST Report Abuse
Girija சீனா வாயை திறக்காது . சீனாவுடன் மோடியின் முற்சிகள் வேஸ்ட் , ஜின்பிங் ஒரு நன்றி கூட இந்திய மக்களுக்கு இடத்திலும் சொல்லவில்லை. ஆறுக்குட்டி வெயிலில் மோளம் அடித்தது வேஸ்ட் . சென்னை மக்களையும் போக்குவரத்துக்கு நெரிசலில் சிக்கவைத்து வெய்யிலில் வருத்தது வேஸ்ட் , சில தனியார் நிறுவனங்கள் அன்று பணிக்கு நேரத்தில் வரமுடியாத ஊழியர்களை வீட்டிற்கு போக சொல்லி வார விடுமுறையில் பணி செய்ய உத்தரவிட்டது . ஜின்பிங் இரண்டுமுறையும் வந்து போனது இந்தியாவின் எல்லைப்பகுதிகள், ஆபத்தா அனுகூலமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X