பொது செய்தி

தமிழ்நாடு

அபராதத்தில் தப்பிக்க சிபாரிசு: அதிகாரிகளுக்கு நெருக்கடி

Added : நவ 13, 2019 | கருத்துகள் (10)
Advertisement
டெங்கு, அதிகாரிகள், சோதனை, அபராதம், ஆளுங்கட்சி, அதிகாரிகள், சிபாரிசு, நெருக்கடி

அவிநாசி: கொசு உற்பத்திக்கு வித்திடும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய, அரசியல் கட்சியினர் நெருக்கடி கொடுப்பதால், அதிகாரிகள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.

கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில், சுற்றுப்புறத்தை வைத்திருக்கும் பட்சத்தில், அதிகாரிகள், அபராதம் விதிக்கின்றனர். அதன செலுத்த தவறினால், குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. உடனே, அவரவர் பகுதியில் உள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களின் சிபாரிசுடன் அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் ஜூரம் அரசியல் கட்சியினரை தொற்றிக் கொண்டுள்ள நிலையில், அவர்கள், ஓட்டு அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்.




இந்நிலையில், அபராத நடவடிக்கையில் இருந்து பொதுமக்களை தப்பிக்க செய்து, அவர்களிடம் நற்பெயர் சம்பாதிக்க, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.ஆனால், 'அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே, துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்கப்படும்' என ஒரு சில அதிகாரிகள் கண்டிப்புடன் இருக்கின்றனர்.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறுகையில், 'டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு அரசியல்வாதிகள் முட்டுக்கட்டடையாக இருப்பது ஏற்புடையதல்ல. சற்றே கவனக்குறைவாக இருந்தாலோ, விதிமுறையை பின்பற்றுவதில் சலுகை காட்டினாலோ, டெங்கு பாதிப்பு அதிகரிக்கும்,' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gandhi - Chennai,இந்தியா
13-நவ-201915:55:36 IST Report Abuse
Gandhi நாடு நாசமா போனதற்கு முக்கிய காரணம் அரசு துறை அதிகாரிகள் தான். இவர்களின் துணையோடுதான் அரசியல் வியாதிகள் ஊழல் செய்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
13-நவ-201914:27:55 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எதோ ஒரு சில அதிகாரிகள் கண்டிப்புடன் இருக்கலாம் , பெரும்பாலும் கடைநிலை ஊழியர்களை அனுப்பிவிடுகிறார்கள், அவர்கள் சோதிப்பது எல்லாம் இல்லை , வாயில் வடைசுட்டுவிட்டு , நோட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு தலையை சொரிவார்கள் பல்லை இளித்துக்கொண்டு, அம்பதோ , நூறோ கொடுத்தால் வாங்கிக்கொண்டு அடுத்த வீட்டிற்கு செல்வார்கள். பலமுறை நான் எங்கள் தெருவில் இதை பார்த்திருக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-நவ-201913:46:22 IST Report Abuse
தமிழ்வேல் ஓட்டுக்காக அலையுற கும்பல் அந்த தண்டத் தொகையை கட்ட வேண்டியதுதானே..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X