பொது செய்தி

இந்தியா

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ரத்து

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (36)
Share
Advertisement
விதிமுறை, என்ஜிஓ, அங்கீகாரம், மத்திய அரசு, ரத்து

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: விதிமுறைகளை மீறி செயல்பட்ட, 1,807 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிலையங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இனி வெளிநாடுகளில் இருந்து நிதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


உத்தரவு


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014ல் பதவியேற்றபோது, விதிமுறைகளை மீறி செயல்படும், என்.ஜி.ஓ., எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க துவங்கியது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை, நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான விஷயங்களுக்கு பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.இதையடுத்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை, மத்திய அரசு கடுமையாக்கியது. இதன்படி, 'தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி எவ்வளவு, அவை எதற்காக செலவிடப்பட்டது என்பது போன்ற விபரங்களை, ஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் அறிக்கையுடன் சேர்த்து, அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், இந்தாண்டு மட்டும், நாடு முழுவதும், 1,807 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், கணக்கு அறிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த நிறுவனங்களின், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் பதிவுகள் ரத்து செய்யபட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பல்கலை, அலகாபாத் விவசாய கல்வி நிறுவனம், குஜராத் ஒய்.எம்.சி.ஏ., கர்நாடகாவில் செயல்படும் சுவாமி விவேகானந்தா கல்வி குழுமம் ஆகியவை, பதிவு ரத்து செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் முக்கியமானவை.


நடவடிக்கை


மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து, இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும், விதிமுறைகளை மீறி செயல்பட்ட, 14 ஆயிரத்து, 800 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
13-நவ-201915:12:37 IST Report Abuse
GMM NGO கள் பதிவு தொண்டு நிறுவனங்கள். பல நிறுவனங்கள் பங்களிப்பு மத மாற்றம், நாட்டுக்கு விரோத செயல். சாதி, மத அடிப்படையில் ஒடுக்கபட்ட தன் மக்களை மேம்படுத்த இட ஒதுக்கீடு. ஆனால், கலப்பு திருமணம், மத மாற்றம் மூலம் சமூகத்தை விட்டு வெளியே சென்றால் இட ஒதுக்கீடு பலன் தராது. காங்கிரசின் ஓட்டுக்கு இரட்டை சலுகைகள் விதி. இட ஒதுக்கீடு ரத்து அல்லது கலப்பு மணம்/மத மாற்ற தடை சட்டம். உண்மையான தொண்டு நிறுவனங்கள் மட்டும் செயல்படும். நடந்தது கொண்டு இருந்த நோக்கியா, காப்பர் ஆலை மூடல். 8 வழி சாலை திட்டம் , கூடங்குளம் போராட்டம். அரசு ரத்து நடவடிக்கை சரியே.
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
13-நவ-201914:46:22 IST Report Abuse
Viswam உண்மையிலேயே சில நல்ல நிறுவங்களும் உள்ளது ஆனால் மெஜாரிட்டி எல்லாம் உப்மா கம்பெனிகள். கேவலம் என்னவென்றால் இவர்களெல்லோரும் நமது நாட்டை மிகவும் அடிமட்ட லெவெலில் தான் காண்பித்து பைசா பெறுகிறார்கள். அதுவும் சிறுபான்மை இனம் அழிவதிலிருந்து காப்பதற்கோ, அல்லது மதம் வளர்ப்பதற்கோ, அல்லது மகளிர் சுகாதாரம் பேணுவதாக காண்பித்தோ, அல்லது சிறுவர் மற்றும் நலிந்தவர் வாழ்க்கை மேம்படுத்துவதாக சொல்லிக்கொண்டோ, பேரிடர் சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவதாக காண்பிப்பதற்கோ அல்லது நிர்வாகம் மற்றும் நிறுவனங்களை எதிர்த்து அரசாங்கத்தை திணறடித்து முயற்சிகளை கைவிட செய்வதற்காகவோ (சாகர்மாலை எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, தூத்துக்குடி எதிர்ப்பு) இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றன. சிறு பார்ட்னெர்ஷிப் குழுமத்திலிருந்து பெரிய நிறுவனங்கள் வரை வரவு செலவு காண்பித்து வருமானவரி செலுத்தும்போது ஒண்ணுமே இல்லாமல் இந்த கையில் பணம்வாங்கி அந்த கையில் செலவு செய்வதாக காண்பித்து, பாதி ஆட்டையைப்போட்டு, மீதியை தேச துரோக காரியங்களுக்கு உபயோகித்தால் இப்படித்தான் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-நவ-201914:30:01 IST Report Abuse
RajanRajan பதிவு ரத்து செய்துடீங்க சரி. முறைகேடு செய்த பொருளாதார குற்றவாளிகளுக்கு தண்டனை என்னாச்சு. தேசத்திற்கு எதிராக வேலை பார்த்த ஒரு புள்ளையும் தப்பிவிட கூடாது சாமியோவ். இந்த அளவுக்கு பொருளாதார குற்றங்களை அரங்கேற்றிய அந்த வாடிகன் ஆட்சியாளர்களை முதலில் தண்டியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X