ஜிம்பாப்வேயில் கடும் வறட்சி: 200 யானைகள் பலி

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜிம்பாப்வே, யானைகள், உயிரிழப்பு, வறட்சி,

ஹராரே: ஜிம்பாப்வேயில் நிலவும் கடுமையான வறட்சியால், அந்நாட்டில் உள்ள வாங்கே தேசிய பூங்காவில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துவிட்டன.

இது தொடர்பாக அந்நாட்டின் உயிரியல் பூங்காவின் செய்தி தொடர்பாளர் பரோவோ கூறுகையில், நாட்டில் நிலவும் காரணமாக, தேசிய பூங்காவில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துவிட்டன. நாட்டில் உள்ள மற்ற விலங்கியல் பூங்காக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டகச்சிவிங்கி, காட்டெருமை, மான் இனங்கள் என அனைத்து விலங்கினங்களும் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. சில பறவை இனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவை, மரக்கிளைகளில் மட்டுமே வாழ முடியும். ஆனால், அந்த மரங்களை யானைகள் முறித்துவிட்டன . மழை பெய்தால் மட்டுமே நிலைமை மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துவிட்டதால், விவசாயிகள் அறுவடை செய்ய முடியவில்லை. நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளன. நாட்டில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து தேசிய அவசர நிலையை ஜிம்பாப்வே அரசு அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் தண்ணீர் நிரம்பி காணப்பட்ட நீர்நிலைகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உதவும் வகையில், தண்ணீர் நிரப்பும் பணிகளில் ரேஞ்சர்கள் ஈடுபடுகிறார்கள். ஆனால், இதற்கு முன்னர் இவ்வாறு நடந்தது இல்லை.

அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜிம்பாப்வேயில் 85 ஆயிரம் யானைகள் உள்ளன. தண்ணீர் இல்லாமல், வன விலங்குகள் அருகில் உள்ள மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நுழைகின்றன. இதனால்,மனிதர்கள் மற்றம் வனவிலங்குகள்இடையே மோதல் ஏற்படுகிறது. இதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து 600 யானைகள், மற்றும் சிங்கங்கள், காட்டு நாய்கள், 50 காட்டெருமைகள், 40 ஒட்டசிவிங்கிககள், 2000 யானைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்புகளை சுமக்கும் திறனை விலங்குகள் மீறிவிட்டன. இதனை சரிசெய்யாவிட்டால், விலங்குகளால் அச்சுறுத்தல் அதிகரிக்கும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

நாட்டில் அதிகமுள்ள யானைகள் மற்றும் அதன் தந்தங்களை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வறட்சியை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கடந்த 2016 முதல் தற்போது வரை 101 யானைகளை விற்று 2.3 மில்லியன் யூரோக்களை ஜிம்பாபப்வே அரசு சம்பாதித்துள்ளது. ஆனால், சீனா மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்சுக்கு அதிக யானைகள் விற்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
13-நவ-201913:51:11 IST Report Abuse
ezhumalaiyaan நமது அரசியல்வாதிகள் திருந்தாவிட்டால் எதிர்காலத்தில் இதே நிலைமை ஏற்படலாம்.
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
13-நவ-201913:26:26 IST Report Abuse
Jayvee காட்டில் மரத்தை வெட்டி வயிறு வளர்க்கும் நம்ம ஊர் அரசியல் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் இப்படித்தான் மரணிப்பார்களோ ? இந்த லட்சணத்தில் வீரப்பன் தியாகியாம்..சைமன் வாக்குமூலம்.
Rate this:
Share this comment
Cancel
13-நவ-201912:23:44 IST Report Abuse
ருத்ரா காடுகள் இன்றி மழை இல்லை மழை இன்றி நிலத்திற்கே தாகம் வேதனை. மிருக ஆர்வலர்களும் பல நாட்டு மனித நேயமும் இணைந்து விலங்குகளுக்கு வழிவகை செய்ய வேண்டும். இறைவா கருணை செய்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X