மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (6)
Share
தமிழகம், மாவட்டங்கள், தென்காசி, நெல்லை, திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை,  திருப்பத்தூர், அரசாணை

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட, 32 மாவட்டங்கள் இருந்தன. பல மாவட்டங்களின் எல்லைகள் பெரிதாக இருந்ததால், அவற்றை பிரிக்க வேண்டும் என, அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு; வேலுார் மாவட்டத்தை பிரித்து, திருப்பத்துார், ராணிபேட்டை; திருநெல்வேலியை பிரித்து, தென்காசி; விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டங்களை, அரசு உருவாக்கியுள்ளது.இந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் அடிப்படையில், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


latest tamil news




இதன்படி,
நெல்லையை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் என 2 புதிய வருவாய் கோட்டங்களும், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், சங்கரன்கோவில், திருவேங்கடம், வி.கே. புதூர் என 8 தாலுகாக்களும் தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

வேலூரை பிரித்து உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்களும், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி என 4 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

வேலூரை பிரித்து உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை, அரக்கோணம் என புதிய வருாய் கோட்டங்களும், வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் என 4 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

காஞ்சிபுரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டங்களும், சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளூந்தூர்ப்பேட்டை, கல்வராயன்மலை தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் குன்றத்தூர், ஆகிய தாலுகாக்கள் செயல்படும்

நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை, என 8 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம்(புதியது) தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

விழுப்புரத்தில் விழுப்புரம் திண்டிவனம் வருவாய் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனூர், மரக்காணம், கண்டச்சிபுரம் தாலுகாக்கள் இடம்பெற்றுள்ள.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X