பொது செய்தி

தமிழ்நாடு

கழிப்பறையில் திருவள்ளுவர் படம் சர்ச்சை

Added : நவ 13, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
திருவள்ளுவர் , படம், குன்னூர்

இந்த செய்தியை கேட்க

குன்னுார் : குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையில், திருவள்ளுவர் மற்றும் சுவாமி சிலை அடங்கிய ஓவியம் வரையப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில், பாரம்பரிய ரயில் இன்ஜின் காட்சிப்படுத்தி வைக்கப்பட்ட தடுப்புச் சுவரில், புலி, காட்டெருமை, யானை உள்ளிட்டவை, ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இவை, சுற்றுலா பயணியரை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையில், பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழக பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஜல்லிக்கட்டு, காளைகள், சேவல் சண்டை, தாரை தப்பட்டை, களரி, சிலம்பம் உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனுடன் சுவாமி சிலை, திருவள்ளுவர் ஓவியங்கள் வரைவது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.


latest tamil news



ஹிந்து முன்னணி மாவட்டச் செயலர் கார்த்திக் கூறுகையில், ''தமிழக கலாசாரத்தை கேவலப்படுத்தும் விதமாக, கழிப்பறை சுவரில், திருவள்ளுவர் படமும், சுவாமி சிலையும் ஓவியமாக வரைவது கண்டிக்கத்தக்கது.''நடவடிக்கை எடுக்கா விட்டால், மாவட்ட மற்றும் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
13-நவ-201915:29:16 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அராஜகத்தின் உச்ச கட்டம் இவரின் பேரை சொல்லி ஊர் முழுதும் சொத்து சேர்த்து அசிங்கப்படுத்தும் கேவலமான தலைவரின் பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு பொறுப்பு ஏற்பாரா
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-நவ-201915:03:27 IST Report Abuse
skv srinivasankrishnaveni புத்திகெட்டுப்போயாச்சு இந்த அறிவுஜீவிகளுக்கெல்லாம் வெட்கமே இல்லாம எதுவும் செய்ரதுகள் பெரியார் தான் இதுகளுக்கெல்லாம் குலதெய்வம் பல தாரம் கட்டுண்ட முகவின் சமாதிலே திருமணம் செய்றானுக ஜெயா சமாதிலே மொட்டை போடுறதுகள் தமிழ்நாடு ரொம்பவே கேவலமா இருக்கு என்று சொன்னால் அவ்ளோதான் கண்ணாபின்னானு ஏசுவானுக .உலகமே போற்றும் வள்ளுவரை தமிழ்நாட்டுலே எவ்ளோகேவலம் பண்ணமுடியுமோ அவ்ளோகேவலமா அசிங்கம் பண்ரான்னுக
Rate this:
Cancel
13-நவ-201914:34:34 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் திருவள்ளுவர் எழுத்தாணியை இடது கையில் வைத்திருப்பது போல ஏன் வரையவேண்டும்.
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
13-நவ-201915:23:41 IST Report Abuse
Nallavan Nallavanபல மார்க்கத்தவர்களுக்கு இடது கையில் எழுதும் பழக்கமுண்டு ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X