மகாராஷ்டிராவில் அரங்கேறிய 'மகாபாரதம்'

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (20) | |
Advertisement
மும்பை: சிவசேனாவின் பதவி மோகத்தால், மகாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. மாநிலம் உருவான, 59 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா இடையே, 30 ஆண்டுகளாக கூட்டணி நீடித்தது. சிறுசிறு பூசல்கள் நிலவினாலும், இரு கட்சிகளும், 'சகோதர அணிகளாக' செயல்பட்டு வந்தன. இம்முறை இணைந்தே தேர்தலை சந்தித்து, அறுதிப்
maharastra, sharad pawar,  uddav thackeray, adithya thacketry, uddav, bjp, shivsena, congress, indhra, indhra gandhi, மகாராஷ்டிரா, பா.ஜ., பாஜ, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சரத்பவார்,இந்திரா,உத்தவ்

மும்பை: சிவசேனாவின் பதவி மோகத்தால், மகாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. மாநிலம் உருவான, 59 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா இடையே, 30 ஆண்டுகளாக கூட்டணி நீடித்தது. சிறுசிறு பூசல்கள் நிலவினாலும், இரு கட்சிகளும், 'சகோதர அணிகளாக' செயல்பட்டு வந்தன. இம்முறை இணைந்தே தேர்தலை சந்தித்து, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தும், சிவசேனாவின் முதல்வர் பதவி மோகத்தால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல், இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியவில்லை. மகாராஷ்டிரா மாநிலம், 1960ம் ஆண்டு மே முதல் தேதி உருவாக்கப்பட்டது. இங்கு இதுவரை மூன்று முறை ஜனாதிபதி ஆட்சிக்கு அமலுக்கு வந்துள்ளது.பவாரை பழிவாங்கிய இந்திரா


latest tamil newsகடந்த, 1978ம் ஆண்டு, காங்கிரஸ் முதல்வராக இருந்த வசந்ததாதா படேல் அரசை கவிழ்த்து, அமைச்சராக இருந்த அதிருப்தியாளர் சரத் பவார் முதல்வரானார். 1980ம் ஆண்டு, சரத் பவார் தலைமையிலான முற்போக்கு ஜனநாயக முன்னணி அரசை, அப்போதைய பிரதமர் இந்திரா, அரசியல் காரணங்களுக்காக கலைத்தார்.தொடர்ந்து, முதல் முறையாக அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, அந்துலே முதல்வரானார்.பவாரின் பதவி மோகம்


latest tamil newsகடந்த, 2014ம் ஆண்டு, 34 ஆண்டுகளுக்குப் பின், இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. காங்கிரஸ் முதல்வராக இருந்த பிருத்விராஜ் சவான் அரசுக்கு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ், 2014 செப்., 28ல் ஆதரவை வாபஸ் பெற்றது. இதுவும் பதவி மோகத்தால் நடந்த மோதல் தான்.தேர்தலில் சம அளவில் தொகுதி பங்கீடு கேட்ட, தேசியவாத காங்கிரஸ் முதல்வர் பதவியையும் தங்களுக்கு தர வேண்டும் என, முரண்டு பிடித்தது. இதற்கு காங்கிரஸ் உடன்படாத காரணத்தால், கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் விலகியது. முதல்வர் பிருதிவிராஜ் சவான் பதவி விலகியதால், ஜனாதிபதி ஆட்சியின் கீழ் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. பா.ஜ., கூட்டணி கட்சியான சிவசேனாவும், தொகுதி உடன்பாட்டில் திருப்தி ஏற்படாமல், தனித்து போட்டியிட்டது. நான்கு முனைப் போட்டியில், பா.ஜ., வென்று தேவேந்திர பட்னவிஸ் முதல்வரானார். பின்னர், பா.ஜ., அமைச்சரவையில் சிவசேனாவும் சேர்ந்து கொண்டது.உத்தவ் புத்திர பாசம்


latest tamil news


தற்போது, மூன்றாவது முறையாக, மகாராஷ்டிராவில், அரசியல் கட்சிகளின் அதிகார மோகம் காரணமாக, அரசியல் அமைப்பின், 356வது பிரிவு பயன்படுத்தப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாபாரதத்தில், திருதராஷ்டிரரின் புத்திர பாசத்தால், மகாபாரதப் போர் ஏற்பட்டது. அதேபோல், மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க வேண்டும் என்ற உத்தவ் தாக்கரேவின் பிடிவாதத்தால், சகோதர கட்சிகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இங்கு யாரும் ஆட்சியமைக்க முடியாமல், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
13-நவ-201915:57:07 IST Report Abuse
Suppan சிவசேனா ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களான மராட்டியர் என்பதற்காக பிரதிபா பாட்டியும் (ஞாபகம் உள்ளதா? ஜனாதிபதி பதவிக்கென்று கிடைத்த பரிசுகளையெல்லாம் ஒன்று விடாமல் எடுத்துக்கொண்டு போனார் அவர்தான்)கூட்டணிக் கட்சிகளை வெறுப்பேற்றுவதற்காக பிரணாப் முகர்ஜியையும் ஆதரித்தது. இது சரித்திரம். ஆக அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-நவ-201914:59:22 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்திராலேந்து சிவசேனா என்றாலே கான் கிரேஸுக்கு விளக்கெண்ணைப்பால கிளாஸ் குடிச்சாப்பலதான் பிஜேபி க்கு மக்கள் நீரை ஓட்டுபோட்டுருக்காங்க என்பது உண்மை சிவசேனாவையும் மக்கள் ஆதரிச்சு ஓட்டுபோட்டுருக்காங்க ரெண்டு காங்கிரஸுக்கு கிடைச்ச இடம் எவ்ளோ தெறியுமில்லே அப்படியும் சோனியாவும் சரத்பாவரும் சிவசேனாவை ஏமாற்றி ஆட்ச்சி செய்ய வெறியாயிருக்கங்கா என்றால் அவ்ளோபணவெறி சிவசேனாவின் பதவி வெறியால் மக்களுக்கு தொல்லை என்றும் முட்டாள்கள் கூட கான் கிரேஸை விரும்பலீங்க அவ்ளோ பிராடுகள் பணவெறி பிடிச்சதுங்க அதுக்கப்பத்தி தெரிஞ்சுதான் சிவசேனை நழுவினாங்க தேர்தல் சிலவை இந்த வ்ல்லஓயுமவ் தான் தேர்தல் கமிஷனுக்கு தரணும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும் மக்கள்வரிப்பணம் வீணாகப்போகப்படாது
Rate this:
Cancel
13-நவ-201914:38:20 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் டேய் தகப்பா , 29 வயது மகனை முதல்வராக்க உத்தவ் முயல்கிறார் , 39 வயது மகனை முலாயம் முதல்வர் ஆக்கிவிட்டார். என்னை இப்படி புலம்ப விட்டுட்டியே தகப்பா.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X