'செக்' வைத்த பவார்: ஆடிப்போன சிவசேனா

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (69)
Advertisement

மும்பை: மகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததால் கவர்னர் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் ஆட்சி அமைக்க என்ன செய்யலாம் என்பது பற்றி அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.





மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., உடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனா, முதல்வர் பதவியில் பங்கு கேட்டதால் மோதல் ஏற்பட்டு, கூட்டணி முறிந்தது. ஆட்சி அமைப்பதற்காக தேசியவாத காங்., மற்றும் காங்., உடன் சிவசேனா பேசி வந்தது. முதலில் கூட்டணியை மறுத்த தேசியவாத காங்., பின்னர் இறங்கி வந்தது.
இதற்கிடையில், தீவிர இந்துத்துவா கொள்கை கொண்ட சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது சரியாக வராது எனவும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதே சிறந்தது என நினைத்து வந்த காங்., தற்போது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள காங்., மூத்த நிர்வாகிகளை அழைத்து பேசிய கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா, மகாராஷ்டிராவில் எப்படியாவது ஆட்சி அமைக்க முயற்சி செய்யுங்கள்; இல்லாவிட்டால் மகாராஷ்டிராவில் காங்., கட்சி மொத்தமாக காணாமல் போகும் என கண்டிப்பாக கூறி விட்டாராம்.





காங்., உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற நிலைக்கு சிவசேனாவும் வந்தது. சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து, அரசில் அங்கம் வகிக்க முடிவு செய்த சோனியா, கூட்டணி கட்சியான தேசியவாத காங்.,ன் தலைவர் சரத் பவாரை போனில் அழைத்து தனது யோசனையை கூறி உள்ளார். ஆனால் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது சரியாகாது என சரத் பவார் கூறியதால், தனது முடிவை சோனியா பரிசீலித்து வருகிறார். இருந்தும் ஆட்சியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற முடிவில் சோனியா தீவிரமாக இருப்பதால், செயல்குழு உறுப்பினர்கள் சிலரை சிவசேனாவுடன் பேச சொல்லி உள்ளார்.





இது ஒரு புறம் இருக்க, கூட்டணி அமைக்க வேண்டுமானால் முதல்வர் பதவி வேண்டும் என தேசியவாத காங்., நிபந்தனை விதித்துள்ளது. இதனால் சிவசேனா அதிர்ச்சியில் உள்ளது. பா.ஜ.,வுக்கு சிவசேனா விதித்த அதே நிபந்தனையை, சிவசேனாவுக்கு தேசியவாத காங்., விதித்துள்ளது. தேசியவாத காங்.,ன் நிபந்தனையை ஏற்றால் காங்.,க்கும் ஆட்சியில் பங்கு தர வேண்டி இருக்கும் என்பதால், பா.ஜ., உடனான கூட்டணியை மீண்டும் தொடரலாமா என சிவசேனா ஆலோசித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
18-நவ-201914:31:41 IST Report Abuse
Indhuindian அரசனை நம்பி புருஷனை கைவிட்டால் உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா? மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினால் இப்படித்தான் இதுக்கு தான் அரசியல் அனுபவம் வேணும் சும்மா உதார் விட்டுகிட்டு தொண்டர்களை உசுப்பி மராத்தியர்களை அடிக்கிறது உதைக்கிறதுக்கு ஒரு கட்சி அதுக்கு ஆட்சி அதுக்கு முதல் மந்திரி பதவி வெட்கக்கேடு
Rate this:
Share this comment
Cancel
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
18-நவ-201911:53:05 IST Report Abuse
S.V.SRINIVASAN ஒரு தமிழ் சினிமாவில் வடிவேலு கடற்கரையில் ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து நகையை பறித்து கொண்டு கடற்கரையில் உள்ள குதிரையின் மீது ஏறி ஓடுவார் அப்போது நகையை பறி கொடுத்தவர்கள் அந்த குதிரையின் சொந்தக்காரரிடம் வடிவேலு குதிரையில் ஓடுவதை கூறி அதை பிடிக்க சொல்வார்கள். அதற்கு அவர் அலட்சியமாக திரும்பி வருவான் அம்மா என்பார். அதே போல் அந்த குதிரை சற்று தூரம் சென்று பின் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடும். இப்போது சிவசேனாவின் நிலயும் அப்படிதான் உள்ளது. கேவலமான அரசியல்.
Rate this:
Share this comment
Cancel
vvkiyer - Bangalore,இந்தியா
18-நவ-201910:15:23 IST Report Abuse
vvkiyer ஆசை யாரை விட்டது . மஹாராஷ்ட்டாவின் குமாரசுவாமி தாக்கரே . குமாரஸ்வாமியின் நிலை தான் இவருக்கும் ஏற்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X