ஒரே நாளில் 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: சபரிமலை மற்றும் ரபேல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதும், தேர்தல் பிரசாரத்தின் போது, 'காவலாளி திருடன்' என மோடியை விமர்சித்த ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கிலும் நாளை(நவ.,14) உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயது பெண்களுக்கு அனுமதி வழங்கப்படாததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
சபரிமலை, ரபேல், மறுசீராய்வு, அய்யப்பன், ஐய்யப்பன், சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: சபரிமலை மற்றும் ரபேல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதும், தேர்தல் பிரசாரத்தின் போது, 'காவலாளி திருடன்' என மோடியை விமர்சித்த ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கிலும் நாளை(நவ.,14) உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயது பெண்களுக்கு அனுமதி வழங்கப்படாததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், 'அனைத்து வயது பெண்களையும் அய்யப்பன் கோவிலில் அனுமதிக்கலாம்' என, தீர்ப்பளித்தது.
உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட, 48 மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது


latest tamil news



இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் ஊழல் நடக்கவில்லை என தீர்ப்பு வழங்கியது இதனை எதிர்த்தும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


latest tamil news




தேர்தல் பிரசாரத்தின் போது, 'காவலாளியே திருடன்' என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக, ராகுல் மீது பா.ஜ., எம்.பி., மீனாட்சி லோகி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சபரமலை அய்யப்பன் கோவில் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு மீது நாளை (நவ.,14) காலை 10.30 மணிக்கு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனு மீதும், ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மீதும் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
13-நவ-201916:26:36 IST Report Abuse
Seitheee கம்யூனிஸ்ட்ஸ் களுக்கு ஐயப்பன் பாடம் சொல்லி தருவார்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
13-நவ-201915:31:16 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தேச விரோத சக்திகளுக்கு வைக்கும் ஆப்பாக இருந்தால் மகிழ்ச்சி தான் . பாப்போம் .பாரத மாதாவை பிரார்த்திப்போம்
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
13-நவ-201915:26:25 IST Report Abuse
Nagarajan D காவலாளியை திருடன் என பெனாத்தியவன் யாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X