பா.ஜ.,வில் தகுதிநீக்க எம்எல்ஏ.,க்கள்: கர்நாடக அரசியலில் திருப்பம்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (17)
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏ.,க்களும் பா.ஜ.,வில் இணையவுள்ளனர். இதனால் அடுத்தடுத்த அதிர்ச்சியில் காங்., - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் உறைந்து போய் உள்ளன.






கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் இரு கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அவர்களை அப்போதைய கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஜூலையில் தகுதி நீக்கம் செய்தார். இதனால் பெரும்பான்மை இல்லாததால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. சபாநாயகர் முடிவை எதிர்த்து 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் இன்று (நவ.,13) தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், 17 எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்கம் செல்லும் என அறிவித்தது.




இந்நிலையில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். 17 தகுதிநீக்க எம்எல்ஏ.,க்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. நாளை முதல் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கம் செல்ல உள்ளோம். இடைத் தேர்தலில் 17 தொகுதிகளிலும் நாங்கள் 101 சதவீதம் வெற்றி பெறுவோம் என்றார்.





17 தகுதிநீக்க எம்எல்ஏ.,க்களும் பா.ஜ.,வில் இணைய உள்ளனரா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடியூரப்பா, இன்று மாலை வரை பொறுத்திருங்கள். அவர்களுடனும், தேசிய கட்சி தலைமையிடமும் பேசி வருகிறேன். இன்று மாலை சரியான முடிவை எடுப்போம் என சூசகமாக தெரிவித்தார். அடுத்தடுத்த இந்த அதிர்ச்சிகளால் காங்., மஜத., அடுத்து என்ன செய்வது என தெரியாமல் நிலை குலைந்து போய் உள்ளன.


நாளை இணைவு


இந்நிலையில், மாலையில் பேசிய எடியூரப்பா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏ.,க்களும் நாளை பாஜ.,வில் இணையவுள்ளதை உறுதிப்படுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-நவ-201901:46:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //தேசிய கட்சி தலைமையிடமும் பேசி வருகிறேன். இன்று மாலை சரியான முடிவை எடுப்போம் என சூசகமாக தெரிவித்தார்.// கவர்னர் பதவி கனவு.. கல்லா கட்டுறது நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-நவ-201901:45:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மந்திரி பதவின்னு தூண்டிலை போட்டு, இப்போ எம்.எல்.ஏ மாச சம்பளம் கூட இல்லைன்னு ஆயிடிச்சு. ஆளுக்கு நூறு கோடின்னு பேசினதை செய்வாரா கிரானைட் கிங்?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-நவ-201901:43:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அச்சச்சோ, தகுதி நீக்கம் செல்லும்னு ஆயிடுச்சா, அவனவன் அமைச்சர் பதவி, சொசைட்டி டைரக்ரடர், துறை லஞ்ச கமிஷன் பதவின்னு காத்துக்கிட்டு இருந்தார்களே. அப்படி சொல்லி தானே இழுத்துபோட்டோம். இப்போ எம்.எல்.ஏ சம்பளம் கூட இல்லாம மோயிடிச்சே.. சரி, பாஜக தான் முட்டை வாங்கி தந்தாகூட கவர்னர் பதவி கொடுக்குறவங்களாச்சே. எல்லாருக்கும் தியாகி பட்டம், பத்மவிருதுன்னு கொடுத்து பதிமூணு ஸ்டேட்டுக்கு வேணாம், கர்நாடகாவுக்கு அசிஸ்டன்ட் கவர்னர் ஆக்கிடலாமா? ஹலோ, கோயிந்து இருக்காருங்களா?
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
14-நவ-201910:26:13 IST Report Abuse
Chowkidar NandaIndiaஹா ஹா ஹா. தேர்தலில் படுதோல்வி கண்ட ஷீலா தீக்ஷித், N D திவாரி போன்றவர்களை கவர்னராக ஆக்கி மகிழ்ந்த கான்க்ராஸ் கட்சி, ஷங்கர் தயாள் ஷர்மா, பிரதிபா பாட்டில், மீரா குமார் என்று கான்க்ராஸ் கட்சியில் போணியாகாமல் போனவர்களை ஜனாதிபதிகளாக நியமித்த கட்சி உத்தமர்கள் கட்சி என்று அதன் அடிப்பொடிகள் கூவுவது எல்லோரையும் சிரிக்க வைப்பது. ஒருவேளை இவர்களெல்லாம் தியாகிகள் என்று நினைத்து தான் அவர்களை ஜனாதிபதிகளாக ஆக்கியதோ என்னமோ. யாருக்கு தெரியும். என்ன நான் சொல்றது?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X