பொது செய்தி

தமிழ்நாடு

காலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா தயாரிப்பாளர்கள்...

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (41)
Advertisement

சென்னை: பெரிய நடிகர்களை நம்பி எடுக்கப்பட்ட சில படங்கள்' பார்த்த பார்வை நிறைய சினிமா தயாரிப்பாளர்களின் கண்களை திறந்துள்ளது. பெரிய நடிகர்களிடம் பல கோடி பணம் கொடுத்து, ஹீரோவாக்கி அழகு பார்த்து, படம் ஓடாமல் போகும்போது, சில தயாரிப்பாளர்களுக்கு வேதனை தான் மிஞ்சுகிறது. இதில் கடைசியாக இணைந்துள்ள படம் பிகில்.






கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், சில லட்சங்களை மட்டுமே லாபமாக கொடுத்தது, திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் குதிரை மீது தான் பணம் கட்ட முடியும் என்று பொதுவாக கூறப்படுவது உண்டு. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம் முதல் அது தான் நடந்தது. எம்ஜிஆர் படங்களில் என்ன பெரிய கதை இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். ஆனால் 90 சதவீத எம்ஜிஆர் படங்கள் கட்டாயம் ஓடிவிடும் வசூலையும் தந்துவிடும். ஒரே காரணம் எம்.ஜி.ஆர்., என்ற சூப்பர் ஸ்டார் அப்போது இருந்தது தான்.





அதே போல சிவாஜியின் மீதும் ரிஸ்க் எடுக்க சில தயாரிப்பாளர்கள் முயன்றது உண்டு. உதாரணமாக ‛‛சிவந்த மண், ராஜராஜ சோழன்'' போன்ற பிரம்மாண்ட படங்களை சிவாஜியை வைத்து தயாரித்தனர். ஆனால் அந்த படங்கள் போதிய வசூல் இன்றி பெட்டிக்குள் முடங்கின. அப்போதே அது பரபரப்பாக பேசப்பட்டது. தயாரிப்பாளர்கள் திருந்த வேண்டும் என்று அப்போதும் குரல் எழுந்தது. ஆனால்,எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்.

சில தயாரிப்பாளர்கள் பணத்தாசையால் நடிகர்கள் மீது பணத்தை கட்டுவது வாடிக்கையாகவே இருக்கிறது. ரஜினி, கமல் மீதும் அப்படித்தான் பணம் கட்டப்பட்டது. இப்பொழுது பெரிய நடிகர்கள் என கருதப்படும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் மீதும் பணம் கட்டப்படுகிறது. ஆனால் என்ன நடக்கிறது, விக்ரம், சூர்யா, விஜய் படங்கள் சில மண்ணைக் கவ்வி, பல கோடி இழப்பை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தி தந்தன.
இருந்தாலும் இந்த தயாரிப்பாளர்களால் சும்மா இருக்க முடிவதில்லை. திரும்பவும் விட்டதை எடுப்போம் என்று எண்ணிக்கொண்டு, அதே நடிகர், அதே இயக்குனர் என்று ஒரே திசையில் பாய்கிறார்கள். விளைவு மீண்டும் அதே அடி. இப்படித்தான் பிகில் விஷயத்திலும் நடந்துள்ளது.





பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தயாரிப்பாளர் கூறும் போது, ஒவ்வொரு சங்க கூட்டத்திலும் பணக்கார தயாரிப்பாளர்கள் பேசும்போது, முன்னணி நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும். இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என நீட்டி முழக்குவார்கள். கூட்டம் முடிந்ததும், நைஸாக நழுவி சென்று பெரிய நடிகர்கள் யாரையாவது பிடித்து நிறைய சம்பளம் கொடுப்பதாக பேசி கால்ஷீட் பெற்றுவிடுவார்கள்.
இதற்கு அவர்களின் பேராசை தான் காரணம். இதனாலேயே பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வியை தழுவினாலும் சம்பளம் கூடுகிறதே தவிர குறைவதில்லை. இப்படி செய்துவிட்து பல கோடி நஷ்டப்பட்டு, நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்றார்.





இன்னொரு தயாரிப்பாளர் கூறும்போது, நாங்களும் பல வருடமாக இதைத் தான் பேசி வருகிறோம். மெர்சல், பிகில், விவேகம், என்ஜிகே., 24, சிங்கம் 3, ஸ்கெட்ச், சாமி 2 மாதிரியான படங்களுக்கு பிறகாவது நடிகர்களின் முகத்திற்கு முக்கியத்துவம் தராமல் கதைக்கு முக்கியத்துவம் தந்தால் புண்ணியமாக போகும். ரசிகர்களுக்காக படம் எடுக்க கூடாது. பொதுமக்களுக்காக எடுக்க வேண்டும். கைதியை பார்த்தாவது நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan Kumar - nellai ,இந்தியா
17-நவ-201922:32:45 IST Report Abuse
Saravanan Kumar இங்கே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். MGR காலம் வேறு விஜய் காலம் வேறு. அன்று மக்களின் பொழுது போக்கு சினிமா மட்டும் தான் தவிர அன்று மக்களுக்கு கல்வி அறிவும் குறைவு. ஆனால் இன்று அப்படி அல்ல . தரத்தின் அடிப்படையில் தான் வெற்றி தோல்வி தீர்மானிக்க படும். மார்க்கெட்டிங் காரணமாக தான் இந்த லட்சம் லாபமும் கிடைத்தது. இல்லை என்றால் பெரும் நஷ்டம் ஆகும். அன்று தவறை சுட்டி காட்டும் ஊடகங்களும் குறைவு. ஆனால் இன்று அப்படி அல்ல. எம்ஜியார் காலத்தில் முகநூல் இருந்திருந்தால் அவர் படமும் தோல்வியை தான் தழுவி இருக்கும். இது தான் எதார்த்த உண்மை. இன்னமும் இளம் தமிழ் தலை முறையினருக்கு போதிய எதார்த்த அறிவோ விவேகமோ சிந்திக்கும் திறனோ இல்லாமல் இருப்பதால் தான் மெகா ஹீரோ என்று சொல்லப்படும் படங்கள் ஓடுகிறது.இல்லை என்றால் 95 % தமிழ் படங்கள் தோல்வியை தான் சந்திக்கும் . இது தான் எதார்த்த உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Kadambur Srinivasan - Chennai,இந்தியா
16-நவ-201908:12:52 IST Report Abuse
Kadambur Srinivasan ரசிகர்களுக்காக படம் எடுக்க கூடாது. பொதுமக்களுக்காக எடுக்க வேண்டும் - சரியான கருத்து
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-நவ-201904:08:44 IST Report Abuse
J.V. Iyer ஒரு சில முன்னணி நடிகர்கள் நடிப்பிலும், கதையிலும் கவனம் செலுத்தினால் படம் வெற்றி அடையும். இவர்களுக்கு முதல்வர் ஆசை. பேராசை. எதாவது உளறிவிடுகிறார்கள். கதையிலும் ஹிந்து மதத்தை புண்படுத்துவது, பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்துவது, அனாவசிய பன்ச் டயலாக், என்று தயாரிப்பாளர்கள் பணத்தை ஸ்வாகா செய்கிறார்கள். இவர்கள் படமும் வெற்றி பெறாது. அரசியல் கனவும் பொய்த்துவிடும். என்று திருந்தப்போகிறார்கள்? இதற்கு ஒரே விதிவிலக்கு தலை அவர்கள் தான். இவரைப்பார்த்து மற்றவர்கள் பாடம் கற்பார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X