பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சியில் அதிக இடம்: அதிமுகவிடம் பா.ம.க., எதிர்பார்ப்பு

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (7)
Advertisement
உள்ளாட்சி, அதிமுக, அ.தி.மு.க., பா.ம.க., பாமக, ஜி.கே.மணி,

இந்த செய்தியை கேட்க

கிருஷ்ணகிரி: உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பா.ம.க., கூடுதல் இடங்களை கேட்டு பெறுவோம் என அக்கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். இதனால் அதிமுக யோசனையில் ஆழ்ந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையம் இதற்கான பணிகளை செய்து வரும் நிலையில், திமுக, அதிமுக தயாராகி வருகின்றன.




இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடந்த பா.ம.க , ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க, தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது:
வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க., போட்டியிடுகிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பா.ம.க., கூடுதல் இடங்களையும், உரிமைகளையும் கேட்டு பெறுவோம். இந்த தேர்தலில் நாம் பெரிய வெற்றி பெற வேண்டும். அ.தி.மு.க., கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
பா.ம.க., போட்டியிடும் இடங்களிலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களிலும் பா.ம.க.,வினர் கட்டுப்பாட்டுடன் வேலை செய்ய வேண்டும். கட்சிக்கு எதிராக செயல்பட்டால், எந்த பொறுப்பில் இருந்தாலும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக., இன்னும் கூட்டணி கட்சிகள் துவங்காத நிலையில், கூடுதல் இடங்களை பெறுவோம் என பா.ம.க, கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
13-நவ-201917:19:57 IST Report Abuse
RajanRajan ஓ அப்போ இங்கேயும் டவுசர் கழன்றுடாம பார்த்துக்கோ முருவா முருவா. உங்க ஒத்துமையிலே தான் குடும்ப கட்சி கிழிஞ்சு தொங்கணும் என்பதை மறந்துடாதீங்கப்பா.
Rate this:
Share this comment
Cancel
R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
13-நவ-201915:20:01 IST Report Abuse
R D Moorthy யார் வேணாலும் கூட்டு வைங்க ஆனால் தி மு க ஒழீய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
13-நவ-201915:09:54 IST Report Abuse
JSS திமுகவை ஒழிக்கவேண்டுமென்றால் பாமக மற்றும் மற்ற கட்சிகளும் இணைந்து செயல் படவேண்டும். திமுக அழிவது தமிழ்நாட்டுக்கு நல்லது. குடும்ப அரசியலை முன்னெடுக்கும் திமுகவை தோற்கடிக்கவேண்டியது மிகவும் அவசியம். ஒரு சிலர் பாமகவையும் குடும்பக்கட்சி என்று கூறலாம். திமுகவில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் எதனை பேர் தலைவர்கள் பாமகவில் எத்தனையே பேர்? மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X