இலங்கை அதிபர் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்வு

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (3)
Advertisement
இலங்கை, அதிபர் தேர்தல், பிரசாரம், முடிவு, சஜித் பிரேமதாசா,  கோத்தபயா

இந்த செய்தியை கேட்க

கொழும்பு: வரும் 16 ல் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்று(நவ.,13) நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு, தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

இலங்கையில் அதிபராக சிறிசேன உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் வரும் 16 ல் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 35 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதசாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கோத்தபய ராஜபக்சே, இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் ஆவார்.





இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி தேர்தல் அறிக்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்யப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.





ஆளும் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு சட்டம் அளிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.



தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளதால், வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-நவ-201914:13:18 IST Report Abuse
இந்தியன் kumar இந்தியாவின் ஆதரவு யாருக்கு ???
Rate this:
Share this comment
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
13-நவ-201913:44:09 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் ஜெயிக்க போவது இந்தியாவா .. சீனவா.. பார்ப்போம்..
Rate this:
Share this comment
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
13-நவ-201917:02:49 IST Report Abuse
aryajaffnaசீனாதான் எப்பவும் ஜெயிக்கும் ,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X