தலைமை நீதிபதி அலுவலகம்: ஆர்டிஐ கீழ் வரும்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டும்' என, சமூக சேவகர், எஸ்.சி. அகர்வால் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக,
Supreme Court, Chief Justice of India, transparency law, Right to Information Act, சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதி,  தகவல் அறியும் சட்டம், ஆர்டிஐ

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டும்' என, சமூக சேவகர், எஸ்.சி. அகர்வால் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் தகவல் அதிகாரி, மத்திய தகவல் ஆணையர் அலுவலகம் ஆகியவை விசாரித்தன. அதைத் தொடர்ந்து விசாரித்த, டில்லி ஐகோர்ட்டின் மூன்று நீதிபதிகள் அமர்வு, 2010ல் தீர்ப்பு அளித்தது. 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெறும்' என, தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சிவ் கன்னா அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.இந்தாண்டு ஏப்., 4ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.


latest tamil newsஇந்த வழக்கில் இன்று(நவ.,13) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தகவல் அறியும் சட்டம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகத்திற்கும் பொருந்தும் எனக்கூறி, டில்லி ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது. நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதித்துறையின் சுதந்திரத்தை காரணம் காட்டி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. பொறுப்பும், சுதந்திரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என தெரிவித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 3 பேர், ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தும், 2 பேர் எதிராகவும் தீர்ப்பு வழங்கினர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-நவ-201918:44:29 IST Report Abuse
நக்கீரன் சபாஷ் சரியான தீர்ப்பு. ஆனால், அது வெறும் ஏட்டளவில் மட்டும் இருக்கக்கூடாது. கடைநிலை மனிதர்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள் தான். அவற்றின் மீது வெறுப்பும் நம்பிக்கையின்மையும் குறைந்து வருவது ஜனநாயகம் என்று நாம் சொல்கிறோமே அதற்க்கு நல்லதல்ல.
Rate this:
Cancel
Krishnan S - Chennai,இந்தியா
13-நவ-201918:14:49 IST Report Abuse
Krishnan S இந்த தீர்ப்பினால் யாருக்கு பிரயோஜனம்? நடக்கற அநியாயங்களை நீதிபதிகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும்போது, இதுவும் ஒரு கண் துடைப்புதான்..
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
13-நவ-201916:58:33 IST Report Abuse
GMM நீதி, நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை உண்டு. திமுக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் நிழல் அதிகாரம் எடுத்து கொண்டனர். அரசு கருவூலத்தில் இருந்து ஒரு பைசா எடுக்க முடியாது. சசிகலா (ஜெயா), மாயா, லாலு, ராசா, கனி,.. ஊழலுக்கு விதி மீறல் காரணம்? விதியை மீற (இட ஒதுக்கீடு ) அலுவலர்களை பயன் படுத்தி வந்தனர். அரசியல்வாதிகள் எதையும் செய்ய முடியும் என்ற மாயையை உருவாக்கினர். அதிகாரிக்கு சட்ட விதி மீறல் சமூக நலம் என நீதி மன்றத்தில் வாதாடி வென்றனர். நீதி மன்றத்தில் உதவ துறை வாரியாக UDC போன்ற பதவி வக்கீல் மனு மீது விதி முறைகளை கூறி தள்ளுபடி செய்ய வழி இல்லை. மக்களுக்கு தன் பிரச்சினை தீர்க்க அதிகாரம் யாரிடம் உள்ளது என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் விதி படி செயல் பட்டால் RTI சட்டம் தேவையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X