அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆளுமை இல்லாத ரஜினி: சீண்டும் சீமான்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (72)
Advertisement
Seeman, Rajinikanth, வெற்றிடம், சீமான், நாம்தமிழர்கட்சி, ரஜினி, ரஜினிகாந்த்

திருச்சி: கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் பொழுது அரசியலுக்கு வராத ரஜினி ஆளுமை இல்லாதவர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, ரஜினி அரசியலுக்கு வர இருப்பது ஏனோ ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடாக அவ்வப்போது ரஜினியை கடுமையாக சாடி வந்தார்.
இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் ரஜினி, தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னமும் இருக்கிறது என கொளுத்தி போட்டாலும் போட்டார், இப்பிரச்னை இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது.
அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் வெற்றிடத்தை முதல்வர் இபிஎஸ் நிரப்பிவிட்டார் எனவும், திமுக பொருளாளர் துரைமுருகன், வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் எனவும் உடனடியாக மறுப்பு தெரிவித்தனர். இப்போது சீமானும், இப்பிரச்னையில் மூக்கை நுழைத்துள்ளார்.




திருச்சியில் சீமான் கூறியதாவது: கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் பொழுது அரசியலுக்கு வராத ரஜினி ஆளுமை இல்லாதவர். தற்போது அவர்கள் இல்லாததால் அரசியலுக்குள் வரவேண்டும் என சொல்லுவது தான் ஆளுமையா. தனக்கு பாஜ காவி பூச முடியாது என்று சொன்ன ரஜினியால் அரை மணி நேரம் கூட தன் கருத்தில் உறுதியாக நிற்க முடியவில்லை. மீண்டும் அவரே அதை பூசி மெழுகினார். இவ்வாறு சீமான் கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒரு பாஜ நிர்வாகி, ‛‛ரஜினியின் அரசியல் வருகை, முதல்வர் கனவில் இருக்கும் பலருக்கும் துாக்கத்தை கெடுத்துள்ளது என்பதையே இது காட்டுகிறது'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-நவ-201916:28:18 IST Report Abuse
Nallavan Nallavan எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் சூப்பரை அரசியலுக்கு அழைத்து வரும்படி ஆமைக்கறியானுக்கு யாரோ கோடிக்கணக்கில் கொடுத்திருக்கிறார்கள் .....
Rate this:
Share this comment
Cancel
jisuki - Doha,கத்தார்
13-நவ-201921:59:15 IST Report Abuse
jisuki சீமான் ஒரு ஆளுன்னு அவனை பத்தியெல்லாம் நியூஸ் .
Rate this:
Share this comment
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
18-நவ-201917:30:45 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைவருங்கால அரசியலில் சீமான் ஒரு அசைக்கமுடியாத சக்தி என்பது இப்போதுதான் அனைவருக்கும் புரிந்திருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
MIRROR - Thamizhagam,இந்தியா
13-நவ-201921:34:15 IST Report Abuse
MIRROR மிகவும் சரியான கருத்து தான் சொல்லியிருக்கிறார் சீமான். ரஜினி சொல்வது போல் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்குமானால், வெற்றிடத்தில் துண்டு போட்டு இடம் பிடிக்க முயற்சிப்பது தான் வீரமா? தைரியம் இருந்திருந்தால் வெற்றிடம் ஏற்படுவதற்கு முன்னதாகவே போட்டியில் இறங்கியிருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X