பட்நாவிஸ்..."முதல்வர்" டூ "சேவகன்"

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (20)
Advertisement

மும்பை : மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், டுவிட்டரில் தனது பெயரை 2வது முறையாக, "மகாராஷ்டிராவின் சேவகன்" என மாற்றி உள்ளார்.






மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்.,24 அன்று வெளியானது. இதில் 105 இடங்களில் பா.ஜ.,வும், 56 இடங்களில் சிவசேனா கட்சியும் வெற்றி பெற்றன. இதனால் 161 இடங்கள் என பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் சமபங்கு கேட்டு சிவசேனா அடம்பிடித்ததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.
இதனால் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியான பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க பா.ஜ., மறுத்து விட்டதால், அடுத்தடுத்த இடங்களில் இருந்த சிவசேனா மற்றும் தேசியவாத காங்.,க்கும் கவர்னர் அழைப்பு விடுத்தார்.




ஆனால் பெரும்பான்மை இல்லை எனக் கூறி, அக்கட்சிகளும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதனால் 20 நாட்கள் அவகாசம் கொடுத்தும் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாதால், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் பரிந்துரைத்தார். இதனை ஏற்று, ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது. தனது தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என முழு நம்பிக்கையுடன் இருந்த தேவேந்திர பட்நாவிஸ், ஆட்சி அமைக்க முடியாததால் நவ.,8 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தனது டுவிட்டர் பக்கத்தில் "முதல்வர்" என இருந்த பெயரை "பொறுப்பு முதல்வர்" என பட்நாவிஸ் மாற்றினார். ஆனால் தற்போது பா.ஜ.,வால் ஆட்சி அமைக்க முடியாதாலும், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாலும் தனது பெயரை "மகாராஷ்டிராவின் சேவகன்" என 2வது முறையாக மாற்றி உள்ளார்.
இது மகாராஷ்டிரா அரசியலிலும், சமூக வலைதளத்திலும் பலரும் கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-நவ-201917:10:46 IST Report Abuse
இந்தியன் kumar பாஜக இனிமேலாவது சொந்த காலில் நிற்க வேண்டும் மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் சேனா போன்ற இன வெறி கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-நவ-201919:32:37 IST Report Abuse
Pasupathi Subbian அடுத்து நாளைய முதல்வர் என்று போடும் காலம் விரைவில் வரும். சிவசேனா எம் எல் எக்களில் ஏறத்தாழ 26 கட்சி தாவுவதற்கு இப்போதே தயார். ஆனால் பி ஜெ பி அதற்க்கு இடம் கொடுக்காமல் அமைதியாக உள்ளது.
Rate this:
Share this comment
MIRROR - Thamizhagam,இந்தியா
13-நவ-201921:24:49 IST Report Abuse
MIRRORஏன் தயக்கம். கட்சி தாவ வைத்து ஆட்சியை கைப்பற்றுவது நமக்கு என்ன புதியதா?...
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
13-நவ-201918:10:44 IST Report Abuse
Rajavel இந்தியாவில் உள்ள முதல்வர்களிலே அதிக கிரிமினல் வழக்கு தேவேந்திர பட்னவீஸ் மீதுதான். முன்பு கிரிமினல் டு முதல்வர். தற்போது முதல்வர் டு மீண்டும் கிரிமினல்
Rate this:
Share this comment
V Venkatachalam - Chennai,இந்தியா
13-நவ-201919:07:02 IST Report Abuse
V Venkatachalamஉன்னோட பக்கிகள் எவனாவது பாட்னாவிஸ்கிட்டமாட்டிக்கொண்டு ரொம்ப உட்டுட்டானா? அதிக வழக்குங்குறே? எத்தனை வழக்கு? ஒன்றா, இரண்டா, ஆயிரமா, பத்தாயிரமா? ஒரே பேத்தலாயிருக்கே? நீ ஏன் பாட்னாவிசை கண்டு பயப்படுறே?...
Rate this:
Share this comment
Rajavel - Ariyalur,இந்தியா
14-நவ-201904:57:18 IST Report Abuse
Rajavelசந்தேகம் இருந்தால் RTI யில் கேள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X