கடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் புகார்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (29)
Advertisement

இந்த செய்தியை கேட்க

நியூயார்க் : சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் குப்பைகளை சுத்தம் செய்யாமல், கடலில் கொட்டுகின்றன. இந்த குப்பைகள் லாஸ் ஏஞ்சல்ஸ் கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.





நியூயார்க்கில் பொருளாதாரம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப், தட்பவெப்ப நிலை மாற்றம் பெரிய சிக்கலான விஷயம். சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடம் இதை சரி செய்வதற்கான பல வழிகள் குறித்து ஆலோசித்து வருகிறேன். பூமியில் தூய்மையான காற்று, நீர் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
உலகில் எப்போதும் காண முடியாத அளவிற்கு மாசு காரணமாக சீனாவும், ரஷ்யாவும் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு மிகவும் மாசுபட்ட ஆண்டாக மாறி உள்ளது. இந்தியாவிற்கு நாம் நிதியுதவி அளித்தும், அவர்கள் நாட்டையே முன்னேற்றி வருகின்றனர். நாமும் தான் நாட்டை வளர்ச்சி பெற வைத்து வருகிறோம்.




சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்களின் குப்பைகளை சுத்தம் செய்வதற்கு பதிலாக மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றன. அவர்கள் தங்கள் குப்பைகளை கடலில் கொட்டுகிறார்கள். அவை லாஸ் ஏஞ்சல்ஸ் கடல் பகுதியில் மிதக்கிறது. மற்ற பிரச்னைகளுடன் லாஸ் ஏஞ்சல்சிற்கு இதுவும் புதிய பிரச்னையாக உள்ளது. இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்கள் நம்மை குறை கூறுவதுடன், இந்த குப்பைகளை நாம் தான் கொட்டியதாக கூறுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
14-நவ-201919:38:53 IST Report Abuse
Sampath Kumar உங்க நாட்டின் மருத்துவ குப்பைகளை நீ எங்கே கொட்டுகிற என்று பார்? பிறகு மற்ற நாட்டை குறை சொல்
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
13-நவ-201923:19:05 IST Report Abuse
Raj இங்கு இந்தியாவில் எந்த சூப்பர்மார்கெட்டிலும் பிளாஸ்டிக் பைகள் கிடையாது, ஆனால் அமெரிக்காவில் அப்படி அல்ல,
Rate this:
Share this comment
R.Balasubramanian - Chennai,இந்தியா
14-நவ-201913:23:16 IST Report Abuse
R.Balasubramanianசூப்பர் மார்க்கெட்டில் கிடையாது ஆனால், சிறு குறு வியாபாரிகள் இன்றும் பிளாஸ்டிக் பயன் படுத்துகிறார்கள், எனவே டிரம்ப் கூறியது தவறு கிடையாது. இது போன்றவற்றை நாம் ஏற்று கொள்ளவேண்டும். பிளாஸ்டிக் தவிர்க்க அனைவரிடம் சொல்ல வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-நவ-201922:36:22 IST Report Abuse
Rajagopal டிரம்ப் வாஷிங்டனில் ஒரு நல்ல தம்பி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X