இந்த செய்தியை கேட்க
புதுடில்லி : காற்று மாசுபாட்டை குறைக்கும் ஜப்பானின் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் குறித்து, டிசம்பர்.3-க்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. அவசர நிலை அமல்படுத்தும் அளவிற்கு காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, காற்று மாசுபாட்டை குறைக்க ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிபொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டுமென தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரான ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாட்டை தீர்க்க கூடிய ஹைட்ரஜன் எரிபொருள் தொடர்பான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக கூறினர்.
மிகப் பெரிய பிரச்னையாக பார்க்கப்படும் இந்த விஷயத்தில் விரைவில் தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, டிசம்பர்.3-ம் தேதிக்குள் இதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய அரசிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE