பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்ந்திருப்பதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன், பின் என ஆண்டிற்கு இரண்டு முறை நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள

இந்த செய்தியை கேட்க

சென்னை : தமிழகத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்ந்திருப்பதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.



latest tamil news


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன், பின் என ஆண்டிற்கு இரண்டு முறை நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட, 1286 நிலத்தடி நீர்மட்ட ஆய்வுக் கண்காணிப்பு கிணறுகளின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில், கடந்த ஆண்டு தரைமட்டத்திலிருந்து 17.5 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்ந்து 14.5 மீட்டர் என்ற அளவில் இருப்பதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


latest tamil news



சமீபத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த தொடர் கனமழை, மக்களிடையே ஏற்பட்டுள்ள நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
14-நவ-201905:37:05 IST Report Abuse
s.maria alphonse pandian இந்த நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரவேண்டும்.....பெய்யும் மழைநீர் வீணாக கடலில் கலக்காமல் நிலத்துக்குள்ளேயே சென்றால் சர்வ சாதாரணமாக மேலும் பல அடிகள் உயர்த்த முடியும்....அரசின் செயல்கள் மட்டுமல்லாமல் பொது மக்களாகிய நாமும் இவைகளை நமது வீடுகளிலேயே செய்ய துவங்கலாம்.
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
13-நவ-201918:28:44 IST Report Abuse
Palanisamy T நீர் மட்டம் உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதை விட இந்த நீர் மட்ட அளவை காப்பாற்றிக் கொள்ள என்ன என்ன நடவடிக்கைகளை மேற்க் கொள்ளலாம் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மணற்க் கொள்ளைகளால், அளவுக்கு அதிகமான மணலை அள்ளுவதால் நீர் மட்டம் வெகுவாகக் குறையும் மக்களிடையே நீர் சேமிப்பின் அவசியத்தை பற்றியும் சிக்கனமாக நீரைப் பயன் படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வையும் கொண்டுச் சேர்க்க வேண்டும் குறிப்பாக நீர் சுழற்சி முறைப் பற்றிய விழிப்புணர்வும் மக்களிடையே மிகக் குறைவாகவேயுள்ளது. சுலபமாக சொன்னால் கடல் நீர் மேகம் பின்பு மழை, அதன் பின் மழை நீர் குளங்கள், நீரோடை ஆறுகளென்று மழை நீர் மீண்டும் கடலுக்கே செல்லுகின்றது. இந்த சுழற்சியில் எங்காவது ஒருப் பாதிப்பு, தடைகளோ அல்லது குறைப்பாடோ ஏற்பட்டால் மழைப் பெய்வது தடைப் படும். ஆறுகளின் மூலமாக கடலுக்குச் செல்ல வேண்டிய நீரையும் நாம் தேவையில்லாமல் தடுக்கவும் கூடாது. அதனால்தான் நீர் சேமிப்புப் பற்றிய அவசியம் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இதிலெல்லோருக்கும் அவசியமான முக்கியமான பங்குண்டு.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-நவ-201918:11:29 IST Report Abuse
RajanRajan முறையாக தடுப்பணைகள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்தால் இன்னும் நிலத்தடி நீர் நிலைமை நன்றாக இருந்திருக்கும். மக்களுக்கு நீர் சேமிக்கும் அக்கறை அரசு துறைகளிடம் இருக்கிறதா என்பது தான் மிக பெரிய கேள்வி இங்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X