பர்டியா: நேபாளத்தின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்ததாக சீன அதிபர் ஜின்பிங் உருவ பொம்பை எரித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டம் பல இடங்களுக்கும் பரவுகிறது.
நேபாளத்தின் 36 ஹெக்டேர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக நேபாள கணக்கெடுப்புத் துறை சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் தெரியவந்தது. அதில், ஹம்லா மாவட்டத்தின் பக்தரேவில் 6 ஹெக்டேரும், கர்னாலி மாவட்டத்தில் 4 ஹெக்டேர் நிலமும் ஆக்கிரமித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இது தற்போது திபெத்தின் புராங் பகுதியில் உள்ளதாக ஆய்வில் கூறப்படுகிறது. இதுபோன்று பல இடங்களில் நேபாளத்தின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதால் சுமார் 100 ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்களை சீனாவிடம் இழக்க வாய்ப்புள்ளது.

இதனால், நேபாளத்தின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது. ஆக்கிரமித்துள்ள நேபாள இடங்களை சீனா திருப்பி கொடுக்க வேண்டும் எனவும், சீனாவே திரும்பி போ எனவும் கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். சிலர், சீன அதிபர் ஜின்பிங் உருவ பொம்பையை எரித்தனர். இதனால், அப்பகுதி போர்களமாக காட்சியளித்தது. மேலும் பல இடங்களுக்கு போராட்டம் பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE