பொது செய்தி

தமிழ்நாடு

ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (104)
Share
Advertisement
சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலைக்கு உதவி பேராசிரியர்களே காரணம் என தன் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில்
Chennai, IIT_Madras, Fathima, Suicide, PhoneNote, ஐஐடி, சென்னை, பாத்திமா, தற்கொலை, போன், ஆதாரம், பேராசிரியர்,

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலைக்கு உதவி பேராசிரியர்களே காரணம் என தன் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் காரணம் கூறினாலும், மாணவியின் பெற்றோர் இதனை மறுத்து வந்தனர்.


latest tamil news


இந்நிலையில், மாணவியின் மொபைல் போனை ஆய்வு செய்த போலீசாருக்கு முக்கியமான தகவல் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் இரு பேராசிரியர்களே காரணம் என்றும், அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும், 8ம் தேதி பதிவு செய்து வைத்துள்ளார். இந்த ஆதாரத்தை கொண்டு மாணவியின் தற்கொலைக்கு குறைந்த மதிப்பெண் காரணமல்ல, பேராசிரியர்கள் தான் என போலீசார் முடிவுக்கு வந்தனர்.


latest tamil news
போராட்டம்


இதற்கிடையே, மாணவியின் தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு ஐஐடி வளாகத்தில் 'கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களுடன் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார்.


கேரள முதல்வர் கடிதம்


இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார். பேராசிரியர்களின் துன்புறுத்தலால் தான், மாணவி தற்கொலை என தந்தை அனுப்பிய புகார் கடிதத்தை பழனிசாமிக்கு அனுப்பினார். இதனால், கோட்டூர்புரம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathiakumar K - delhi,இந்தியா
20-நவ-201912:50:40 IST Report Abuse
Sathiakumar K இது ஒரு மிகப்பெரிய அவமானகரமான செயல்களின் உதாரணம் மட்டுமே. ஒவ்வொரு பல்கலை கழகங்களிலும், கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் மிக முக்கியமாக ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவிகளிடம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுத்தால் இதை போன்ற பல தற்கொலைகளை , பெண்களின் மனஉளைச்சலை உறுதியாக தடுக்க முடியும். இதற்க்கு தன்னலமற்ற காவல் அதிகாரிகளின் கூட்டு முயற்சி, நன்னடத்தை கொண்ட ஆசிரிய பெருமக்களின் ஒத்துழைப்பு , பெண்களின் தைரியம் மற்றும் பொதுமக்களாகிய நமது புரிந்து கொள்ளுதல் மிக அவசியம் .
Rate this:
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-நவ-201911:33:01 IST Report Abuse
Indian Dubai She doesn't have a capacity to learn. also there are so many things happening every day and every hour. why there is a importance only for this IIT muslim girl? Her father is not in tragedy and he is just doing media stunt. All are cheap rated stunt by DMK & kuruma & kani raised this in parliament, Felt shame of the people who elected her. Lot of important issues are available to speak & fight. They will not do all those. All minority vote bank stunts. We knows
Rate this:
Cancel
chenar - paris,பிரான்ஸ்
20-நவ-201900:28:34 IST Report Abuse
chenar ஒரு பெண் எவ்வளவு மனத்தால் துன்பப்பட்டிருந்தால் இந்த முடிவுக்கு வந்திருப்பாள் ? அந்த அயோக்கியர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு எவ்வளவு கல் நெஞ்சம் இருந்தால் மற்ற இயக்கங்களை விமர்சித்து கொண்டு இருப்பீர்கள் ஏன்? அந்த அயோக்கியர்கள் பிராமணர்கள் என்ற ஒரே காரணம் தானே ?
Rate this:
Vincent - Madurai,இந்தியா
20-நவ-201911:13:00 IST Report Abuse
Vincentமடத்தனம். ஸ்டாலின் போன்றவர்கள் தான் இறந்தவர்கள் ஜாதி மதம் பார்த்து அதன் படி அரசியல் செய்பவர்கள். இது ஊருக்கே தெரியும். உங்களை போன்றவர்களுக்கும் புரியும். ஜாதி மத மொழி வெறி நிலையிலிருந்து வெளியே வாங்க. இல்லையென்றால் உள்ளே போக வேண்டி வரும். இது உறுதி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X