அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மிசா' விவகாரம்; திமுக.,வின் புதிய அஸ்திரம்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (116)
Advertisement
DMK,mkstalin,Karunanidhi,ஸ்டாலின்,மிசா,கருணாநிதி,திமுக,dinamalar, தினமலர்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின், 'மிசா'வில் கைது செய்யப்பட்டாரா என்ற விவாதம் கிளம்பி உள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை, தி.மு.க., ஆதாரமாக வெளியிட்டுள்ளது.

மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பாக அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை திமுக விட்டாலும், அதிமுக விடாமல், ஆதாரங்களுடன் நிரூபித்தே தீருவோம் என அடம் பிடித்து வந்தது. இதுகுறித்த விவாதம் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன் மகனும், தற்போதைய திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தை, தி.மு.க., அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அக்கடிதம் 1977ம் ஆண்டு நவ.,28 ல், எம்.ஜி.ஆர்., ஆட்சியில், சென்னை மத்திய சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டிருந்த போது, மகன் ஸ்டாலினுக்கு எழுதப்பட்டது. தனக்கு பேரன் பிறந்த மகிழ்ச்சியில் (ஸ்டாலின் மகன் உதயநிதி) சிறையிலிருந்து ஸ்டாலினுக்கு கருணாநிதி எழுதிய கடிதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவரது கடிதம்:


இது எப்படி???


இந்நிலையில், கடிதத்தில் தேதி 28/11/77 என குறிப்பிட்டு, 'மத்திய சிறை, சென்னை' என உள்ளது. இதனை கையில் எடுத்த நெட்டிசன்கள், மதராஸ் என்பது, 1996ம் ஆண்டு தான் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடைசியில் மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்து விட்டீர்களே என மீம் தயாரித்து அதனை வைரல் ஆக்கி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
20-நவ-201905:55:10 IST Report Abuse
Indhuindian அவசரநிலை ஜனவரி 1977 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அனால் இந்த கடிதத்தின் படி திருவாளர் ஸ்டாலின் அவர்களுக்கு நவம்பர் 1977 இல் அவருடைய தகப்பனார் அவர் சிறையில் இருந்ததாக கடிதம் ஏழுதி இருக்கிறார். எல்லோரையும் வெளியிலே விட்டுவிட்டு திருவாளர் ஸ்டாலின் அவர்களை மட்டும் காங்கிரஸ் அரசு சிறையிலேயே வைத்துப்பது எவ்வளவு கொடுமை மற்றவர்களை வெறும் மிசா ... என்று அக்ஷய்த்தால் ஸ்டாலின் அவர்களை மிசா மிசா மிசா மிசா ஸ்டாலின் என்று அக்ஷய்ப்பதே சரியாகும் ஆகவே இனிமேல் எல்லோரும் அவருடைய பெயருக்கு முன் குறைந்தது ஐந்து மிசாவாவது போட வேண்டும் என்று கழக கண்மணிகளுக்கு உத்தரவு போட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
S.R.Arul - Chennai,இந்தியா
16-நவ-201915:24:46 IST Report Abuse
S.R.Arul In India, "the Emergency" refers to a 21-month period from 1975 to 1977 when Prime Minister Indira Gandhi had a state of emergency d across the country. Officially issued by President Fakhruddin Ali Ahmed under Article 352 of the Constitution because of the prevailing "internal disturbance", the Emergency was in effect from 26 June 1975 until its withdrawal in January 1977. See the date in letter on 28-11-77. O god Kaurans team will never change.....
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
15-நவ-201913:11:24 IST Report Abuse
Harinathan Krishnanandam தினமலர் வாசகர்கள் கிண்டலடித்து எழுதும் கருத்துக்கள் போல அரசியல் வாதிகளும் தலைவர்களும் நாளைக்கு பயன்படும் என்று அரசியல் கருத்துக்களை குடும்ப கடிதங்களில் எழுதி இருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X