தெலுங்கானாவில் தொடர்கிறது; ஆர்.டி.சி ஊழியர் தற்கொலை

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஐதராபாத் : தெலுங்கானாவில் பஸ் ஊழியர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்ததை தொடர்ந்து மற்ற கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.தெலுங்கானாவில் ஏப்., 2017 முதல் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. அக்., 25 ல் சாலை போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராததால் 48,000 ஊழியர்களை ராவ்

ஐதராபாத் : தெலுங்கானாவில் பஸ் ஊழியர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்ததை தொடர்ந்து மற்ற கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.



latest tamil news



தெலுங்கானாவில் ஏப்., 2017 முதல் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. அக்., 25 ல் சாலை போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராததால் 48,000 ஊழியர்களை ராவ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துகழக ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். இதனால் தனியார் ஊழியர்கள் மூலம் மாநில அரசு, பேருந்துகளை இயக்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்து பல ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.


latest tamil news



கடந்த ஒரு மாதத்தில் ஆர்.டி.சி தொழிலாளர்கள் மேற்கொண்ட ஐந்தாவது தற்கொலை இதுவாகும்.


latest tamil news



இன்று (நவ.,13) மகாபூபாத் மாவட்டத்தில் ஆர்.டி.சி டிப்போ ஓட்டுநரான அவுலா நரேஷ் (45) நிதி சிக்கல்களால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறப்பதற்கு முன் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “எனது மரணம் ஆர்.டி.சி ஊழியர்களிடையே கடைசியாக இருக்க வேண்டும். நான் எதிர்கொள்ளும் சிரமங்களை வேறு எந்த ஊழியரும் எதிர்கொள்ளக்கூடாது. எங்கள் குடும்பத்தால் தீபாவளி கொண்டாட முடியவில்லை, எங்களுக்கு உணவு இல்லை, திருவிழாவிற்கு புதிய ஆடைகளும் இல்லை. எனது மரணத்தைப் பார்த்த பிறகாவது, முதல்வர் ராவ், எங்கள் கோரிக்கைகளைத் தீர்ப்பார் என்று நம்புகிறேன். இதற்கு தெலுங்கானா முதல்வர் ராவ் பொறுப்பேற்று, ஆர்.டி.சி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு கூறியிருந்தார்.


latest tamil news



நரேஷின் மரணம் குறித்து அறிந்ததும், ஏராளமான ஆர்.டி.சி தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆர்வலர்கள் மருத்துவமனையில் கூடி வேலைநிறுத்தம் செய்தனர். ஆர்டிசி ஊழியர்களின் அவலநிலை குறித்து அலட்சியம் காட்டியதற்காக மாநில அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் குறித்து தொழிற்சங்கங்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14-நவ-201908:00:36 IST Report Abuse
 nicolethomson வேதனை தரும் செய்தி , இவரது மரணத்திற்கு ராவ் மற்றும் சங்கங்களும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X