சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

கலெக்டர் கறார்... அதிகாரிகள், 'ஜூட்!'

Added : நவ 13, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
  கலெக்டர் கறார்... அதிகாரிகள், 'ஜூட்!'

அனைத்து துறையினருடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் வினய் தலைமையில், மதுரையில் நடந்தது. தலைமை செயலர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்திய ஆய்விற்கு பின், கலெக்டர் வினய், 'மக்கள் குறைதீர் முகாம், மனு நீதி நாள், மக்கள் தொடர்பு முகாம்களில், அதிகளவில், ஆதிதிராவிடர் காலனிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது குறித்து, அதிக மனுக்கள் வருகின்றன.

குறிப்பிட்ட சில கிராமங்களிலுள்ள காலனிகளுக்குப் பொறுப்பு எடுத்து, உயர் அதிகாரிகள் சென்று பார்க்க வேண்டும்; ஊராட்சி செயலர்களிடம் அறிக்கை பெறாமல் நேரடியாக சென்று, என்ன பிரச்னைகள் நிலவுகிறது என, முழுமையாக விசாரித்து அறிக்கை பெற்று, அதை தீர்க்க வேண்டும். எதிர்காலங்களில், காலனிகளிலிருந்து பிரச்னைகள் தொடர்பாக மனுக்கள் வராத அளவிற்கு, பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

அங்கிருந்த அதிகாரி ஒருவர், 'சும்மா பெயருக்கு கூட்டம் நடக்கும்னு நினைச்சு, இங்கே வந்தோம்ன்னா, பாறையை துாக்கி வச்ச மாதிரி, காலனி, 'விசிட்' வேலையை கலெக்டர் கொடுத்துட்டாரே' எனக் கூற, மற்ற அதிகாரிகள், 'ஜூட்' விட்டனர்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-நவ-201906:05:10 IST Report Abuse
D.Ambujavalli நாளைக்கே ‘எத்தனை காலனிகளை விசிட் செய்தீர்கள், எத்தனை மனுக்கள் வாங்கி, எத்தனை தீர்வு செய்தீர்கள்’ என்று குடைய ஆரம்பித்துவிடுவாரோ என்ற கவலையாக இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X