அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் சிவாஜி தோற்றது ஏன்?: இளங்கோவன்

Added : நவ 13, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
சிவகாசி: ''பதவி பெரிதல்ல; கொடுத்த வாக்கு தான் பெரிது என, சிவாஜி நினைத்ததால் தேர்தலில் தோல்வியுற்றார்,'' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.சிவகாசியில் நேற்று அவர் கூறியதாவது: நடிகர் சிவாஜி கணேசன் பற்றி, முதல்வர் இ.பி.எஸ்., மோசமாக பேசியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற, அவரது மனைவிக்கு, தேர்தலில் ஆதரவு கொடுத்ததால், சிவாஜிக்கு

சிவகாசி: ''பதவி பெரிதல்ல; கொடுத்த வாக்கு தான் பெரிது என, சிவாஜி நினைத்ததால் தேர்தலில் தோல்வியுற்றார்,'' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

சிவகாசியில் நேற்று அவர் கூறியதாவது: நடிகர் சிவாஜி கணேசன் பற்றி, முதல்வர் இ.பி.எஸ்., மோசமாக பேசியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற, அவரது மனைவிக்கு, தேர்தலில் ஆதரவு கொடுத்ததால், சிவாஜிக்கு சரிவு ஏற்பட்டது.அன்று, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருந்தால், சிவாஜி மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பார். பதவி பெரிதல்ல; கொடுத்த வாக்கு தான் பெரிது என, சிவாஜி நினைத்ததால் தேர்தலில் தோல்வியுற்றார். நாங்குநேரி தொகுதியில், அ.தி.மு.க., ஓட்டுக்கு பணம் கொடுத்ததால், காங்., தோல்வியுற்றது. காங்கிரசில், உள்ளூர் ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வெளியூர் ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் தோல்விக்கு காரணம். ஒட்டுமொத்தமாக, எங்கள் வேட்பாளர் தேர்வே தவறு.நடிகர் ரஜினி, கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார். அரசியலுக்கு வரக் கூடிய தைரியம், ரஜினிக்கு இல்லை. தேனி தொகுதியில், 350 கோடி ரூபாய் செலவு செய்து, மகனை வெற்றி பெற வைத்து, உலக சாதனை செய்ததால், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அமெரிக்காவில் பட்டம் கொடுத்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.***

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJA - chennai,இந்தியா
14-நவ-201912:55:57 IST Report Abuse
RAJA திரு பாலா அவர்களே நீங்கள் கூறிய யாருமே MGR அவர்களால் பிச்சையெடுக்கவில்லை பந்துலு அவர்கள் கர்ணன் படம் எடுத்து நஷ்டம் அடைந்து MGR அவர்களிடம் ஒரு படம் பண்ணிகொடுக்கும்படி கேட்டதால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக்கொடுத்தார். (அறுபதாயிரம் ரூபாய் கூட பெறாத மழைக்கோட்டுகள் கொடுத்து) அது கூட சிவாஜி கொடுக்கவில்லயே. (தனக்கு பேத்தி வயதுடையவரை இணையாக்குவது) சிவாஜி ஸ்ரீதேவி கூட ஜோடியா நடிச்சதால்தான் ஸ்ரீதேவி தமிழ்நாடே வேண்டாம் என்று ஹிந்திக்கு போனாங்க.
Rate this:
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
14-நவ-201916:17:55 IST Report Abuse
S.V.SRINIVASANMGR தனது பேத்தி வயது உடைய ஹீரோயின்கள்கூட நடித்தது நண்பருக்கு தெரியாதா...
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-நவ-201910:43:11 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நீங்க யோக்கியர் ஒத்துகிறோம் . உங்க தலைவியும் உத்தமர் .உங்க கட்சியும் அரிச்சந்திரார்ஹல் மட்டும் உள்ள கட்சி .
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
14-நவ-201910:34:41 IST Report Abuse
s.rajagopalan இளங்கோவன் பேச்சு எப்போதுமே சுவாரஸ்யமாக இருக்கும். விவாதம் , சர்ச்சை ..ஆகியவைகளை கிளப்புவதில் அவர் வல்லவர். தமிழ் நாட்டில் நமுத்துப்போன பட்டாசு காங்கிரஸ் ...அதற்கு அவ்வப்போது சூட்டைகிளப்புபவர் இளங்கோவன். அந்த கட்சிக்கு அவர்தான் இன்றைய சூழலில் பொருத்தமான லைவர். பாருங்க ,,நாங்குனேரியில் தோற்றதற்கு ஒரு காரணம் சொல்லிவிட்டார். புகை கிளம்பும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X