பொது செய்தி

இந்தியா

வெப்பமயமாதலால் அதிக புயல்: வானிலை மையம்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019
Advertisement
Storm,Weather,புயல்,மழை,வானிலை

புதுடில்லி: புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அடிக்கடி புயல் உருவாகி வந்தன. இதற்கு வெப்பமயமாதல் தான் காரணம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் 11 சதவீதம் புயல் உருவாவது அதிகரித்துள்ளதாகவும், ஐந்தாண்டுகளில் அது 32 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு, மிகவும் கடுமையான சூறாவளியாக ஒடிசாவை தாக்கிய பானி புயலையும், அதிக மழை பொழிய செய்த வாயு புயலையும் குறிப்பிட்டனர்.





1985ம் ஆண்டிற்கு பின், 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தலா ஏழு புயல்கள் உருவாகி இருந்ததாகவும், அதில் ஆறு புயல்கள் அததீவிரமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது குறித்து இந்திய வானிலை மைய அதிகாரி அனுபம் காஷ்யப் கூறுகையில், புவி வெப்பமயமாதலால் கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஐந்து புயல்கள் உருவாகிறது. அதில் 3 புயல்கள் அதிதீவிரமானதாக மாறுகிறது, என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X