ராஜ்யசபா விதி; அமளியில் இறங்கினால் 'சஸ்பெண்ட்'

Updated : நவ 15, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (9)
Advertisement
ராஜ்யசபா, அமளி, சஸ்பெண்ட், வெங்கையா நாயுடு, லோக்சபா, தீர்மானம், ஒப்புதல், எம்.பிக்கள்

புதுடில்லி : லோக்சபாவை போலவே, ராஜ்யசபாவிலும், அமளியில் இறங்கும், எம்.பி.,க்களை, உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்யும் விதியை கொண்டு வர முடியுமா என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.

பார்லிமென்டில் உள்ள, இரு சபைகளுக்குமே, பல்வேறு விஷயங்களில் வெவ்வேறு விதிமுறைகள், நடைமுறைகள் இருக்கின்றன. இரு சபைகளுக்குமே, தனித்தனி வழிகாட்டி கையேடுகள் உள்ளன. அவற்றில் உள்ள வழிமுறைகளின்படி தான், லோக்சபா சபாநாயகரும், ராஜ்யசபா தலைவரும் செயல்படுவர். இந்த இரு சபைகளையும் வழிநடத்திச் செல்லக்கூடியவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்னையே, சபை உறுப்பினர்களான, எம்.பி.,க்களின் அமளி தான்.


பிடிவாதம்


சபை உறுப்பினர்கள் குரல் எழுப்புவது, எழுந்து நின்று வாக்குவாதம் செய்வதோடு நிறுத்தாமல், சபையின் நடுவே குழுமி விடுவர். 'நாங்கள் எழுப்பும் குரலுக்கு பதில் சொல்லாமல், இடத்தை விட்டு நகர மாட்டோம்' என, பிடிவாதத்துடன் அமளியில் ஈடுபடுவர். லோக்சபா விதிமுறைகளின்படி, அமளியில் ஈடுபடும், எம்.பி.,க்களை, அந்த இடத்திலேயே அதிரடியாக சஸ்பெண்ட் செய்வதற்கு, சபாநாயகருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சம், ஐந்து நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்யலாம். ஆனால், ராஜ்யசபாவில் அப்படியில்லை. அமளி செய்யும், எம்.பி.,யை, உடனடியாக சஸ்பெண்ட் செய்ய, சபைத் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
சஸ்பெண்ட் செய்ய வேண்டுமெனில், அது குறித்த தீர்மானம், சபைக்குள் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு, போதுமான எம்.பி.,க்களின் ஆதரவும், ஒப்புதலும் தரப்பட வேண்டும். இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, முயற்சிகளை மேற்கொண்டார். லோக்சபாவில், எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டால், உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வழி இருப்பது போல, ராஜ்ய சபாவிலும் அவ்விதியை கொண்டு வர முடியுமா என்பது குறித்து ஆராய, கடந்த ஆண்டு, ராஜ்யசபாவின் முன்னாள் செக்ரட்டரி ஜெனரல் அக்னிஹோத்ரி தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவும், உடனடியாக தன் அறிக்கையை சமர்ப்பித்துவிட்ட வேளையில், லோக்சபா தேர்தல் வந்துவிட்டது. இதனால், கிடப்பில் போடப்பட்ட அந்த அறிக்கையை, துாசு தட்டி எடுக்க, இப்போது உத்தரவு போடப்பட்டுள்ளது. ராஜ்யசபாவிலும் இந்த விதியை கொண்டு வர, அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


விருந்து


இந்நிலையில், அடுத்த வாரம் துவங்கவுள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடர், ராஜ்யசபாவின், 250வது அமர்வாக துவங்க உள்ளதை முன்னிட்டு, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, அனைத்து கட்சித் தலைவர்களையும், தன் இல்லத்திற்கு அழைத்து, 17ம் தேதி விருந்து தரஉள்ளார். அப்போது, அமளியில் ஈடுபடும் சபை உறுப்பினர்களை, உடனடியாக சஸ்பெண்ட் செய்வதற்காக, அக்னி ஹோத்ரி குழு அளித்துள்ள அறிக்கையின் அம்சங்கள் குறித்து, அதிகாரப்பூர்வமற்ற வகையில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதனால், லோக்சபாவை போலவே, ராஜ்யசபாவிலும், அமளியில் ஈடுபடும், எம்.பி.,க்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்யும் வழிமுறையை அமல்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-நவ-201916:19:30 IST Report Abuse
Endrum Indian சஸ்பெண்ட்' செய்யும் விதியை கொண்டு வர முடியுமா என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது?.இதுக்கெல்லாம் சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள் அதுவே அவங்க சம்பள விவகாரம்னு சொன்னா உடனே அதற்கு ஆமோதிப்பு கிடைத்து விடும்??/
Rate this:
Share this comment
Cancel
AYYA - Chennai,இந்தியா
14-நவ-201915:44:55 IST Report Abuse
AYYA இட ஒதுக்கீட்டை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தினால் பதவி, தகுதி நீக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
14-நவ-201915:14:29 IST Report Abuse
Girija வைகோ காங்கிரசை இலங்கை பிரச்சனையில் வம்புக்கிழுத்தால் போதும் மேட்டர் ஓவர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X