'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன்

Updated : நவ 15, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (93)
Advertisement
அயோத்தி, பார்லிமெண்ட், ராமர் கோவில், மசூதி, சுப்ரீம் கோர்ட், தீர்ப்பு, 2.77 ஏக்கர்

அயோத்தி : 'உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ஹிந்துக் கடவுள் ராமர் கோவில் கட்ட கையகப்படுத்தியுள்ள நிலத்திலேயே, மசூதி கட்டுவதற்கு, 5 ஏக்கர் நிலம் தர வேண்டும்; இல்லாவிட்டால், எங்களுக்கு நிலமே தேவையில்லை' என, முஸ்லிம் அமைப்புகள் கூறியுள்ளன.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


கருத்து


அதே நேரத்தில், மசூதி கட்டுவதற்காக, முஸ்லிம்களுக்கு, அயோத்தியில் ஒரு முக்கியமான இடத்தில், 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 'ராமர் கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு ஏற்கனவே கையகப்படுத்தியுள்ள, 67 ஏக்கர் நிலத்தில், தங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் அல்லது நிலமே தேவையில்லை' என, பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

அயோத்தி நிலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தவர்களில் ஒருவரான, இக்பால் அன்சாரி கூறியதாவது: ஏற்கனவே கூறியபடி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்ய மாட்டோம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மசூதி கட்டுவதற்கு, 5 ஏக்கர் நிலம் தர வேண்டும்.

அதை, அயோத்தியில் மத்திய அரசு ஏற்கனவே கையகப்படுத்தியுள்ள, 67 ஏக்கரில் இருந்து ஒதுக்க வேண்டும். அவ்வாறு அளித்தால், அந்த நிலத்தை ஏற்போம். இல்லாத பட்சத்தில், வேறு எங்கு நிலம் அளித்தாலும் அதை மறுப்போம். இவ்வாறு, அவர் கூறினார். இதையே பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் தலைவர்களும் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதாவது: எங்களுடைய மத மற்றும் மன உணர்வை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அயோத்தி தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ள எங்களை சமாதானப்படுத்த நினைத்தால், அரசு ஏற்கனவே கையகப்படுத்தியுள்ள, 67 ஏக்கரில் இருந்து ஒதுக்க வேண்டும்.


தேவையில்லை


அங்கு பல முஸ்லிம் தலைவர்களின் சமாதிகள், தர்காக்கள் அமைந்துள்ளன. அதனால், அங்குதான் இடம் வேண்டும். நாங்கள் பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தைக் கேட்டுத்தான் வழக்கு தொடர்ந்தோம். வேறு இடத்தில் எங்களுக்கு இடம் தேவையில்லை. வழிபாடு நடத்துவதற்கு எங்களுக்கு நிறைய இடம் உள்ளது. தேவைப்பட்டால், மசூதி கட்டுவதற்கு நாங்களே இடத்தை வாங்கிக் கொள்வோம். எங்களுடைய கோரிக்கையை ஏற்காவிட்டால், அரசு வழங்க வேண்டிய, 5 ஏக்கர் நிலத்தையும், ராமருக்கே நாங்கள் அளிக்கத் தயாராக உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி'


அயோத்தி வழக்கில் தீர்ர்பு அளித்த உச்ச நீதிமன்றம், 'சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டலாம். இந்த நிலம் மற்றும் கோவிலை நிர்வகிக்க, ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்' என்று கூறியது. அதையடுத்து, அறக்கட்டளையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தினேஷ் கூறியதாவது: புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையில், பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம்பெற வேண்டும். குஜராத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோவிலுக்கான அறக்கட்டளை உருவாக்கியபோதும், அப்போது மத்திய அமைச்சராக இருந்தவர் அதில் இடம்பெற்றிருந்தார். ராம ஜென்மபூமி நியாஸ் வடிவமைத்துள்ள மாதிரியின் அடிப்படையில், புதிய கோவில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


'திருப்பதி போல் மாறும்'


அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பை அடுத்து, நகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசின் உயரதிகாரிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. அத்துடன், நகரையும் மேம்படுத்த மாநில அரசு தீவிரமாக உள்ளது. இனி அதிக அளவில் ஹிந்து யாத்ரிகர்களும், சுற்றுலாப் பயணியரும் வருவர்.

அதனால், அயோத்தியில், 'ரிசார்ட்' எனப்படும் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள் என பல புதிய வச திகள் ஏற்படும். அதற்கு ஏற்றாற்போல, சர்வதேச தரத்திலான பேருந்து நிலையம், சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதைத் தவிர, சரயு நதியில், படகுப் போக்குவரத்து வசதியும் செய்யப்பட உள்ளது. இவ்வாறு பல்வேறு புதிய வசதிகளுடன், அயோத்தி நகரை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ளதுபோல், பக்தர்களுக்கு தேவையான வசதிகள், இங்கு செய்யப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
21-நவ-201910:38:38 IST Report Abuse
Ramalingam Shanmugam ரொம்பதான் இடம் கொடுத்துவிட்டோம்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
21-நவ-201906:03:33 IST Report Abuse
meenakshisundaram நல்ல காரியம் -இவனுங்க ராமருக்கே ஐந்து ஏக்கர் நிலம் தரங்களாம் செய்யட்டுமே ,ஏனென்றால் இறந்தவர்களுக்கு 'சமாதி' என்ற பெயரில் இடம் தரும் நபர்களாச்சே ?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
15-நவ-201923:09:26 IST Report Abuse
bal இது மாதிரி எல்லாம் இனி நடக்காது...இது காங்கிரஸ் அரசு இல்லை இவனுக பேச்சை கேட்க...வெட்கமில்லாமல் எப்படி கேக்குறானுக.
Rate this:
Share this comment
GURU PURU INDIAN - beiruth,லெபனான்
19-நவ-201913:35:57 IST Report Abuse
GURU PURU INDIANஎவன் அப்பன் வீட்டு இடத்தை கேட்டார்கள் ? யார் இடத்தை யார் தானம் கொடுப்பது ? ஏண் ஒரு நியாயம் வேண்டாமா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X