குல்பூஷண் ஜாதவுக்காக பாக்.,கில் சட்ட திருத்தம்

Updated : நவ 15, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement
குல்பூஷண் ஜாதவ், பாக்., பாகிஸ்தான்,சட்ட திருத்தம், பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் 49 மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராணுவச் சட்டத்தை திருத்த பாக். அரசு முன்வந்துள்ளது.

இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை உளவு பார்த்ததாக பாக். ராணுவம் 2016 மார்ச்சில் கைது செய்தது. விசாரணை நடத்திய பாக். ராணுவ நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2017ல் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து இந்திய அரசின் சார்பில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. துாக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தாண்டு இது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 'குல்பூஷண் ஜாதவின் தூக்கு தண்டனையை ரத்து செய்கிறோம். அவர் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்' என சர்வதேச நீதிமன்றத்தின் 15 : 1 என்ற விகிதத்தில் நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து குல்பூஷண் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க இந்திய அரசு மனு கொடுத்தது. இந்தாண்டு செப்.ல் சிறையில் உள்ள அவரை பாக்.குக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்தித்தனர். மீண்டும் சந்திக்க மனு கொடுக்கப்பட்டது; ஆனால் அதை பாக். நிராகரித்தது.

இந்த நிலையில் பாக். ராணுவச் சட்டத்தின்படி ராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட வழக்கை மற்ற நீதிமன்றங்களுக்கு மாற்ற முடியாது. சர்வதேச நீதிமன்ற உத்தரவின்படி குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தற்போது ராணுவச் சட்டத்தில் திருத்தம் செய்யு பாக். அரசு முன்வந்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-நவ-201913:09:41 IST Report Abuse
தமிழ்வேல் அவருக்கு, நல்லது நடக்க வேண்டுவோம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X