எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் பொங்கல் பரிசு ரூ.500 வழங்க அரசு முடிவு

Added : நவ 14, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புடன், 500 ரூபாய் ரொக்கம் வழங்கு வதற்கான அறிவிப்பை வெளியிட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. நடப்பாண்டு பொங்கலுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலம், உலர் திராட்சை, கரும்பு துண்டு ஆகிய பொருட்களுடன், 1,000
பொங்கல், ரேஷன் கடை, தமிழக அரசு, ரூ.500, இடைத்தேர்தல்,அரிசி கார்டு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புடன், 500 ரூபாய் ரொக்கம் வழங்கு வதற்கான அறிவிப்பை வெளியிட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு பொங்கலுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலம், உலர் திராட்சை, கரும்பு துண்டு ஆகிய பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கம், இரண்டு கோடி கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டன. இதற்காக அரசு, 2,250 கோடி ரூபாய் செலவழித்தது. ஏப்ரல் மாதம் நடந்த, லோக்சபா தேர்தலில், தேனி தவிர்த்து, மற்ற அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. இருப்பினும், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி; நெல்லை, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில், சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.

இதனால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள, உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டு பொங்கலுக்கு, அனைத்து கார்டுதாரர்களுக்கும், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்குவதாக, அரசு அறிவித்தது.

வசதியானவர்களுக்கு, அதை வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், எந்த பொருளும் வாங்காத, 50 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு, ரொக்க பணம் வழங்கவில்லை. பொங்கல் நெருக்கத்தில், பரிசு தொகுப்பை அறிவித்ததால், பொருட்கள் கொள்முதல் மற்றும் வங்கிகளில், ரூபாய் நோட்டுகள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.

வரும் பொங்கலுக்கு, இரு மாதங்கள் இருந்தாலும், தற்போது, உள்ளாட்சி தேர்தல் தேதி, எப்போதும் வேண்டுமானாலும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த பொங்கலுக்கு, 500 ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான வேலைகளில் அரசு இறங்கி உள்ளது. இது குறித்த அறிவிப்பை, விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. பொருட்கள் மற்றும் ரொக்க பணம் முன்கூட்டியே தயாராக வைக்கப்பட்டு, 2020 ஜனவரி முதல் வாரம் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-201916:29:19 IST Report Abuse
sekar ng அரசு பணத்தை சூரையாடாமல் முறையான வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இது ஊரக தேர்தல் முன்பண லஞ்சமாக கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
14-நவ-201909:55:45 IST Report Abuse
s.maria alphonse pandian ....இந்த பரிசினை இப்போதே அறிவித்துவிட்டு உள்ளாட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவது ஆளும் கட்சிக்கு நல்லது
Rate this:
Cancel
14-நவ-201909:36:56 IST Report Abuse
ஆப்பு பரிசுத்தொகை 1000 ரூவாயிலிருந்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் முன்னேறி இருப்பதைக் காட்டுதா இல்லை கஜானா காலியாகிக் கொண்டிருப்பதைக் காட்டுதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X