தமிழகத்தில் தொழில் செய்ய வாருங்கள்: ஓ.பி.எஸ் அழைப்பு

Updated : நவ 15, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
''தமிழகத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில்களில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன; முதலீடு செய்ய வாருங்கள்'' என அமெரிக்க தொழில் முதலீட்டாளர் களுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம் அங்கு நடந்த இந்திய - அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில்
TN, Tamil Nadu, OPS, தமிழ்நாடு, தமிழகம், துணை முதல்வர், ஓபிஎஸ், ஓ.பி.எஸ்., பன்னீர் செல்வம், அமெரிக்கா, U.S, America

''தமிழகத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில்களில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன; முதலீடு செய்ய வாருங்கள்'' என அமெரிக்க தொழில் முதலீட்டாளர் களுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம் அங்கு நடந்த இந்திய - அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:அமெரிக்க தொழில் முனைவோர் அமெரிக்க வாழ் இந்திய தொழில் முனைவோர் ஆகிய இரு தரப்பினரையும் தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைக்கிறேன். தமிழகம் இந்தியாவில் மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று. இந்தியாவின் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலம்; முதலீடுகளுக்கு மிகவும் ஏற்ற மாநிலம்.

'ஆட்டோமொபைல்' தலைநகரமாக திகழும் தமிழகத்தில் நிமிடத்திற்கு மூன்று கார்கள், 30 வினாடிக்கு ஒரு இரு சக்கர வாகனம், 90 வினாடிக்கு ஒரு கனரக வாகனம் உற்பத்தி செய்யும் வலுவான உயர்தர கட்டமைப்பு வசதிகள் உள்ளன.பல்வேறு தொழில் பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, மருத்துவ பூங்காக்களில் 8000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தொழில் துவங்குவதற்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. நில வணிகம் மற்றும் கட்டுமானத் தொழில்களில் முதலீடு செய்வதற்கு தமிழகத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன.

கட்டுமான திட்டங்கள் அதிகம் இருப்பதால் கட்டுமான கம்பெனிகளும் அந்த தொழிலில் ஆர்வம் உள்ளவர்களும் பங்கேற்கலாம்.தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ற ரம்மியமான சூழல் உள்ளது. தொழில் செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. உட்கட்டமைப்பிற்கு நீண்ட கால நிதியை உருவாக்க இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் பதிவு செய்து இரு மாற்று முதலீட்டு நிதி திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.இதற்கு 'தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் தமிழ்நாடு உறைவிட நிதி' என்று பெயர். இந்த முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்க அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட முதலீடு குழு உள்ளது.

நிறுவனங்களில் இருந்தும் தனி நபர்களிடம் இருந்தும் இந்த நிதியை அரசு பெறலாம். எனவே நீங்கள் தமிழகத்தில் உள்ள உள்கட்டமைப்பு நிதியிலும் உறைவிட நிதியிலும் முதலீடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பெரியகுளத்தில் கூடைப்பந்து அகாடமி!சிகாகோ நகரில் நடந்த இந்திய - அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது 'சிகாகோ குலோபல் ஸ்ட்ராடெர்ஜிக் அலையன்ஸ்' நிறுவனம் உதவியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் தமிழ்நாடு உறைவிட நிதிக்கு 700 கோடி ரூபாய் முதலீடுகள் திரட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தேனியில் 'மெட்ரோபாலிட்டன் ஏசியா பேமிலி சர்வீசஸ்' மையம் சார்பில் மூத்த குடிமகன்களுக்கு ஒரு மையம் அமைக்கப்படும் என அதன் நிறுவனர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 'கூடைப்பந்து அகாடமி' அமைக்கப்படும் என சிகாகோ நகரின் 'டீம்' பயிற்சியாளர் கென்ஸ்மேன் உறுதி அளித்தார்.அமெரிக்காவின் நெப்பர்வல்லி நகரின் மேயர் ஸ்டீவ் சிரிக்கோ 'நகரின் சாவி'யை துணை முதல்வருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். அவருக்கு திருவள்ளுவர் சிலையை துணை முதல்வர் நினைவுப் பரிசாக வழங்கினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201916:35:10 IST Report Abuse
Nepolian S ஏய்யா டயர் உன்னையெல்லாம் மா மனிதனா மதித்து கூப்டானுக ...அந்தம்மா இல்லாம காமெடி அரசியலும் ..அடிமை ஆட்சியும் நடக்கிறது...
Rate this:
Cancel
14-நவ-201915:41:25 IST Report Abuse
சரவணன் முதலீட்டாளர்களை அழைக்க சென்றுளார்
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
14-நவ-201915:02:57 IST Report Abuse
Rajas காக்கினிசன்ட் கம்பனியிடம் 14 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியவனை பற்றி இதுவரை அங்கே எதுவும் கேட்கவில்லையா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X