சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா கடத்திய இருவர் கைது

Added : நவ 14, 2019
Share
Advertisement
மரக்காணம் ; கோட்டக்குப்பத்தில் பைக்கில் கஞ்சா கடத்திய, இருவரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் நேற்றிரவு, அங்குள்ள ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை போலீசார் மடக்கியபோது, நிறுத்தாமல் சென்றனர்.இதை தொடர்ந்து, போலீசார் இருவரையும் துரத்திச் சென்று, பிடித்து

மரக்காணம் ; கோட்டக்குப்பத்தில் பைக்கில் கஞ்சா கடத்திய, இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் நேற்றிரவு, அங்குள்ள ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை போலீசார் மடக்கியபோது, நிறுத்தாமல் சென்றனர்.இதை தொடர்ந்து, போலீசார் இருவரையும் துரத்திச் சென்று, பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், கோட்டக்குப்பத்தை சேர்ந்த தமீம்அன்சாரி, 23; நகபுக் ரகுமான், 19; என்பதும், பைக்கில் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், தமீம்அன்சாமி, நகபுக் ரகுமான் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X