கண்டன தீர்மானம்: டிரம்ப் மீதான விசாரணை துவங்கியது

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
 கண்டன தீர்மானம்: டிரம்ப், விசாரணைதுவங்கியது

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், 2020 -ம் ஆண்டு நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டொனால்டு டிரம்ப் போட்டியிட முயற்சித்து வருகிறார்.


latest tamil news



எதிர்க்கட்சியான, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, முன்னாள் துணை அதிபர், ஜோ பிடனும் முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜோ பிடனை வீழ்த்த திட்டமிட்ட, டிரம்ப், ஜோ பிடன், இவரது மகன் ஹன்ட்டர்ஸ் குறித்து அவதூறு பரப்ப உதவும்படி, ஐரோப்பிய நாடான, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு நெருக்கடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. உக்ரைன் அதிபருடன், டிரம்ப் தொலைபேசியில் பேசிய விபரத்தை, அதிபர் மாளிகையைச் சேர்ந்த ஒருவர் பகிரங்கமாக அம்பலப்படுத்தினார்.

இதையடுத்து டிரம்புக்கு எதிராக, ஜனநாயகக் கட்சி, கண்டன தீர்மானம் கொண்டு வந்துள்ளது. பார்லி.உளவு கமிட்டி இதன் மீதான தனது விசாரணையை துவக்கியது. முதல் முறையாக, இந்த விசாரணை, 'டிவி'யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இது குறித்து டிரம்ப் கூறியது, டி.வி. ஒளிபரப்பை பார்க்க எனக்கு இப்போது நேரமில்லை நான் ரொம்ப பிஸியாக உள்ளேன்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
14-நவ-201906:43:54 IST Report Abuse
Aaaaa அமெரிக்கர்கள் கொடுத்து வைத்தவர்கள்
Rate this:
Cancel
Jana - Chennai,இந்தியா
14-நவ-201905:49:37 IST Report Abuse
Jana இது குறித்து டிரம்ப் கூறியது, டி.வி. ஒளிபரப்பை பார்க்க எனக்கு இப்போது நேரமில்லை
Rate this:
Cancel
14-நவ-201904:26:10 IST Report Abuse
மும்பை நாநா ஆமாம் ‌பயங்கர‌ பிஸி. கரையோரம் ஒதுங்கும் குப்பைகளை எடுத்து அதில் மேக் எந்த நாடு என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X