பொது செய்தி

இந்தியா

வரும்,19ல் டில்லியில் கூடுது காவிரி ஒழுங்கு முறை குழு

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 வரும், 19ல் டில்லி,கூடுது காவிரி ஒழுங்கு முறை குழு

சென்னை, காவிரி ஒழுங்கு முறை குழு கூட்டத்தை, வரும், 19ம் தேதி, டில்லியில் நடத்த, முடிவு செய்யப் பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டு தோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு நியமித்து உள்ளது.




காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவர் இல்லாததால், ஜூன் மாதத்திற்கு பின் கூட்டம் நடத்தப் படவில்லை. தற்போது, ஆணையத்திற்கு தலைவரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை, மத்திய அரசு துவங்கியுள்ளது. அதேநேரம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம், தொடர்ந்து நடந்து வருகிறது.
ஏற்கனவே, அக்., மாதத்திற்கான கூட்டம், திருச்சியில் நடந்தது. இம்மாதத்திற்கான கூட்டம், வரும், 19ம் தேதி, டில்லியில் நடக்க உள்ளது. குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடக்கவுள்ள இக்கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்திற்கு மாத ஒதுக்கீட்டின்படி நீர் திறக்க, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். காவிரி அணைகளில், கர்நாடகா மாநிலத்தின் பாசனம், குடிநீர் தேவைக்கு எடுக்கப்படும் நீரின் விவரங்களை, குழுவின் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, இக்கூட்டத்தில், தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shoba -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201907:40:51 IST Report Abuse
shoba ippo sanda poradhan malai kaalam varaikum time pass aagum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X