சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (53)
Advertisement

கோவை: கோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் பலியாயினர்.





கோவை இருகூர் - சூலூர் இடையேயான ராவுத்தர்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் புதனன்று இரவு 11.30 மணியளவில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற அதிவேக ரயில் கல்லூரி மாணவர் மீது மோதியது. இதில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த மாணவர்கள் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த முகமது சித்திக், ராஜா, கருப்புசாமி, ராஜசேகர், கவுதம் என தெரியவந்தது. கரும்புசாமி, கவுதம் ஆகிய இருவர் அரியர்ஸ் தேர்வு எழுத வந்த பொறியியல் மாணவர்கள். மற்ற மூவரும் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு படித்து வந்துள்ளனர் என தெரியவந்தது.


இது குறித்து கூறப்படுவதாவது: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த இருகூர் அருகே ராவுத்தர் பாளையம் பகுதியில் அந்த வழியாக வந்த ஆழப்புழா -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவத்தில் மாணவர்கள் 4 பேரும் பலியாயினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் விசாரணையில் பலியான மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவருபவர்கள் எனவும், நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது ரயில் மோதி பலியாகினர் போலீசார் தெரிவித்துள்ளனர். பலியான மாணவர்கள் கொடைக்கானல் சித்திக் ராஜா, நிலக்கோட்டை ராஜசேகர், ராஜபாளையம் கவுதம், கருப்பசாமி என தெரிகிறது.இறந்த மாணவர்களின் உடலை கைப்பற்றி போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சர்வாதிகாரி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
21-நவ-201901:47:14 IST Report Abuse
சர்வாதிகாரி சொடலை நாட்டில் நாலு தறுதலைகள் குறைந்து விட்டது
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-நவ-201905:59:58 IST Report Abuse
meenakshisundaram இவர்கள் எந்த நடிகரின் 'ரசிகர்களோ?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16-நவ-201919:31:34 IST Report Abuse
 nicolethomson டாஸ்மாக் தந்த தானை தலைவன் அவனது குடும்பமும் இன்று முழுதும் துக்கம் அனுசரிக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X