புதுடில்லி: ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
இதன் மூலம், தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுவோர். வேலை நிமித்தம் வேறு மாநிலங்களுக்கு செல்வோர், வீடு மாறுவோர் பெரிதும் பயன்பெறுவார்கள். தற்போது அவர்கள் வசிக்கும் புதிய முகவரியை மட்டும் கொடுத்து, அதே ஆதார் எண்ணை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இது தொடர்பான உத்தரவை மத்திய அரசு நேற்று பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், சுயவிளக்கம் ஒன்றுடன் புதிய முகவரியுடன் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, நிரந்தர முகவரி, தற்போதைய பணியிட முகவரி என இரண்டு முகவரிகளை பயன்படுத்த முடியும். புதிய இடத்தில் வங்கிக்கணக்கு துவங்க இந்த சட்ட திருத்தம் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE