சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி தண்ணீர் லாரியை பெண்கள் சிறைபிடிப்பு

Added : நவ 14, 2019
Share
Advertisement
தர்மபுரி: துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் காலிக்குடங்களுடன், நகராட்சி குடிநீர் லாரியை சிறை பிடித்தனர்.கடந்த இரு மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால், தர்மபுரி நகராட்சி, 10வது வார்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில், மழைநீருடன், பிடமனேரி ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரும் சேர்ந்து, தேங்கியது. இதனால், இப்பகுதியில் தாழ்வாக உள்ள

தர்மபுரி: துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் காலிக்குடங்களுடன், நகராட்சி குடிநீர் லாரியை சிறை பிடித்தனர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால், தர்மபுரி நகராட்சி, 10வது வார்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில், மழைநீருடன், பிடமனேரி ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரும் சேர்ந்து, தேங்கியது. இதனால், இப்பகுதியில் தாழ்வாக உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததுடன், தர்மபுரி, பென்னகரம் சாலையிலும் தேங்கியது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், இப்பகுதிகளில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது, அன்னை சத்யா நகர் உட்பட, அருகே உள்ள பகுதிகளுக்கு செல்லும், நகராட்சி குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், இப்பகுதி மக்களுக்கு, நகராட்சி நிர்வாகம் லாரி மூலம், குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது, போதிய அளவு இல்லை எனவும், துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்கவும் வலியுறுத்தி, அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், நேற்று, தண்ணீர் வழங்க வந்த, நகராட்சி குடிநீர் லாரியை, காலிக்குடங்களுடன் சிறை பிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த, நகராட்சி அலுவலர்கள், கால்வாய் அமைக்கும் பணி முடிந்த பின், மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அதுவரை, லாரி மூலம் போதிய அளவு தண்ணீர் வழங்கப்படும் என, உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் லாரியை விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X