குடியரசு தின சிறப்பு விருந்தினர் பிரேசில் அதிபர்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
பிரேசிலியா: அடுத்த ஆண்டு (2020) குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா பங்கேற்க உள்ளார்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனராவை சந்தித்து பேசினார். அப்போது பயங்கரவாதம், இரு தரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.இது
குடியரசு தினம், சிறப்பு விருந்தினர், பிரேசில் அதிபர், ஜெயிர் போல்சோனாரா,பிரதமர் மோடி

இந்த செய்தியை கேட்க

பிரேசிலியா: அடுத்த ஆண்டு (2020) குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா பங்கேற்க உள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனராவை சந்தித்து பேசினார். அப்போது பயங்கரவாதம், இரு தரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.


latest tamil news


இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இரு தலைவர்களும், இரு தரப்பு உறவு குறித்து நடத்திய ஆலோசனை பயனுள்ளதாக இருந்தது. 2020 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை அவரும் ஏற்று கொண்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
14-நவ-201909:50:20 IST Report Abuse
Nathan ஒரு கணம், ஒரே ஒரு கணம் யோசித்தேன், பின் தலையை உதறிக் கொண்டு வெளியே வந்துவிட்டேன். ஜப்பானுக்கு பீஎம் கனவு போல இந்தியாவுக்கும் சுடலை பீலா விட்டு , அது எப்படி இருக்கும்னு நெனச்சேன் . ஐயோ பயங்கர சொரைக்காயதிகாரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X