பொது செய்தி

இந்தியா

2020ல் சந்திரயான் - 3: இஸ்ரோ திட்டம்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (7)
Advertisement
இஸ்ரோ, சந்திரயான்-3, சந்திரயான்-2, விக்ரம் லேண்டர்,

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: சந்திரயான் - 3 திட்டத்தை 2020நவம்பர் மாதம் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் அனுப்பியது. இதில் விக்ரம் லேண்டருடனான கட்டுப்பாட்டு அறை தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சந்திரயான்- 3ன் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதனை அடுத்த ஆண்டு நவ., மாதம் செயல்படுத்தப்படும் என்றும், சந்திரயான்-3 மூலம் அனுப்பப்படும் லேண்டர் வலுவானதாகவும், எந்த சூழலிலும் தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்படும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


3டி புகைப்படம் வெளியீடு


நிலவை சுற்றி ஆய்வு செய்து வரும் சந்திரயான்- 2 விண்கலம் நிலவின் புகைப்படங்களை அவ்வபோது அனுப்பி வருகிறது. இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலம் எடுத்த , நிலவின் மேற்பரப்பில் உள்ள கிராடர் பள்ளங்களின் 3டி புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

டெரைய்ன் மேப்பிங் கேமரா 2 முழுமையான நிலவின் மேற்பரப்பின் டிஜிட்டல் மேம்பட்ட மாதிரியை தயாரிப்பதற்காக, 100 கி.மீ., சுற்றுப்பாதையில் இருந்து 5 மீ பரப்பை மும்டங்கு தெளிவுத்திறன் கொண்ட ஸ்டீரியோ படங்களை வழங்கியுள்ளது என இஸ்ரோ கூறியுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivakumar - Permbalur,இந்தியா
14-நவ-201914:58:19 IST Report Abuse
Sivakumar SOTHUKE LOTTERY KANJUKKU BAATTERY, BOREWELL LA VILUNTHA PULLAYA KAAPPATHAA VAKKU ILAA,,
Rate this:
Share this comment
Cancel
sudhanthiran. - chennai,இந்தியா
14-நவ-201914:03:09 IST Report Abuse
sudhanthiran. மிக்கமகிழ்ச்சி, வெற்றிபெற வாழ்த்துகள். ராக்கெட்டுகளுக்கு இப்போது நடைமுறையில் இருக்கும் எஞ்சின்களைவிட இரண்டு முதல் நான்கு மடங்கு திறனுள்ள எஞ்சின்களை காலம் தாழ்த்தாமல் உருவாக்கவேண்டும்.மத்தியஅரசு ISRO உட்பட விண்வெளி நிறுவனங்களுக்கான பட்ஜெட்டை மூன்று மடங்கு உயர்த்தி தரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
14-நவ-201912:34:06 IST Report Abuse
Yezdi K Damo பொதுமக்களுக்கு தினசரி வாழ்க்கையில் பயன்படுமாறு எதையாவது செஞ்சிட்டு அப்புறமா நிலவுக்கு போங்க . வெறும் போட்டோ புடிச்சி தள்றதுக்கு கோடிகளில் செலவு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X