சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப பிரச்னையால் கொடூரம்: 150 அடி பள்ளத்தில் குழந்தைகளை வீசி கொன்ற தந்தை கைது

Added : நவ 14, 2019
Advertisement

கொல்லிமலை: குடும்ப பிரச்னை காரணமாக, இரு குழந்தைகளையும், 150 அடி பள்ளத்தில் வீசி கொன்ற தந்தையை, போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை குண்டூர் நாடு, அரசம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சிரஞ்சீவி, 28. அவரது மனைவி பாக்கியம், 24. மகன், கிரிதாஸ், 8, மகள், கவிதர்ஷினி, 5. தம்பதியருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் பாக்கியம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, மனைவியை பழிவாங்கும் நோக்கில், கடந்த, 7ல் மனைவியிடமிருந்து இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்தார். அதற்கு பிறகு குழந்தைகளை காணவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் விசாரித்தனர். அதற்கு சிரஞ்சீவி மழுப்பியுள்ளார். இதுகுறித்து, நேற்று காலை, வாழவந்திநாடு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிரஞ்சீவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், இரு குழந்தைகளையும், செம்மேடு சீக்குப்பாறையில் உள்ள, 'வியூ பாயின்ட்' மீது ஏறி, 150 அடி பள்ளத்தில், தூக்கி வீசியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை, அழுகிய நிலையில் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. போலீசார், சிரஞ்சீவியை கைது செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X