சபரிமலை வழக்கு: நீதிபதிகள் கூறியது என்ன?

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (44)
Advertisement

புதுடில்லி : சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் இன்று, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து இவ்வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.





வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், தனிப்பட்ட உரிமைக்கும், வழிபாட்டு உரிமைக்கும் இடையேயான வழக்கு. தீர்ப்பு இந்து பெண்களுக்கு மட்டுமானது என வரையறுத்து விட முடியாது. பெண்களுக்கான கட்டுப்பாடு சபரிமலையில் மட்டுமல்ல. வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. சபரிமலை தொடர்பான வழக்கில் மதம் தொடர்பான நம்பிக்கை பற்றி வாதங்களை கருத்தில் கொண்டோம்.





சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்விற்கு மாற்றப்படுகிறது. இவ்வழக்கில் 5 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து விரிவான அமர்விற்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்படுகிறது. 5 நீதிபதிகளை கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள், இவ்வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்ற பரிந்துரைத்தனர். இதனையடுத்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பின் நிலையே தொடரும்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
15-நவ-201900:08:59 IST Report Abuse
Vetri Vel எது வலியது...? சிலையா.? சிலையை செதுக்கிய உளியா.... கற்பனைக்கு உருவம் கொடுத்த சிற்பியா...?.. .... அந்த இடத்தில பலமாக தட்டியிருந்தால் ஆண்... பெண்ணாகி இருக்கும்.. நான் செதுக்கும்போது... வருத்தப்படுவது செதுக்கிய உளி... மரமண்டைகளின் நிலைமையை பார்த்து...
Rate this:
Share this comment
Cancel
AYYA - Chennai,இந்தியா
14-நவ-201922:47:55 IST Report Abuse
AYYA நீதிபதிகளுக்கு எல்லா துறையிலும் நுண்ணறிவு கிடையாது. (உதாரணமாக சைபர் செக்யூரிட்டி பத்தி எந்த நீதிபதிக்கு தெரியும்?) சம்பந்த பட்ட வழக்கில் அதற்க்கு உரிய நிபுணர்களை கன்சல்ட் செய்துதான் தீர்ப்பு வழங்க வேண்டும். தான்தோன்றி தனமாக, எல்லாம் தெரிந்ததுபோல் நடக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
AYYA - Chennai,இந்தியா
14-நவ-201922:43:05 IST Report Abuse
AYYA இந்து மக்களின் நம்பிக்கையில் தலையிட எந்த கோர்ட் க்கும் உரிமை இல்லை. பக்தர்களின் நம்பிக்கையை கோர்ட்/சட்டம் என்ற பெயரில் தகர்க்கக் கூடாது. நாம் கோர்ட் ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X