சபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (14)
Advertisement
SabarimalaVerdict, சபரிமலை, அமர்வு, உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான மறு சீராய்வு மனுவை, 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் 3 பேர் விரிவான அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர்.


அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி


கேரளாவில்,பத்தினம்திட்டா மாவட்டத்தில், பம்பை நதிக்கரையில் அமைந்துள்ளது, உலகப் புகழ்பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவில். இந்தக் கோவிலுக்கு செல்ல, 10 - 50 வயது பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு, செப்.,ல் தீர்ப்பு அளித்தது. 'அனைத்து வயது பெண்களும், எந்தப் பாகுபாடு இல்லாமலும் சபரி மலைக்கு செல்லலாம்' என, தீர்ப்பில் கூறப்பட்டது.


மறு சீராய்வு மனு


இந்த தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு முயன்றது. ஆனால், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்தாண்டு மண்டல கால பூஜையின்போது, சபரிமலைக்கு செல்வதற்கு பல பெண்கள் முயன்றனர். ஆனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தப் பிரச்னையால், பல இடங்களில் வன்முறையும் நடந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மொத்தம், 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.






உரிமை உள்ளது


நீதிபதிகள் ஆர்.எப்.நரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், இந்தாண்டு, பிப்., 6ல் ஒத்தி வைத்தது. இந்த முக்கியமான வழக்கில், நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு: இந்த நிலையில்,மதம் என்றால் என்ன என விவாதிக்க வேண்டும் என மனுதாரர்கள் விரும்புகின்றனர். மற்ற மத வழிபாடுகள் குறித்தும் மனுதாரர்கள் விளக்கியுள்ளனர். தனிநபர் உரிமை மற்றும் வழிபாட்டிற்கான உரிமை இடையில் வழக்கு உள்ளது. பெண்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது சபரிமலையில் மட்டும் அல்ல வேறு கோயில்கள், மசூதிகளிலும் உள்ளது. மதம் சாரந்நத நம்பிக்கை தொடர்பான வாதங்களை கருத்தில் கொண்டோம். தீர்ப்பு ஹிந்து பெண்களுக்கு மட்டும் என வரையறுத்து விட முடியாது. அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கையை கடைபிடிக்க உரிமை உள்ளது. சபரிமலையில் பெண்கள் செல்வதற்கான முந்தைய தீர்ப்பிற்கு தடையில்லை, தற்போதைய நிலை தொடரும் எனக்கூறி, இந்த மறுசீராய்வு மனுவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர்.

சபரிமலை வழக்கை, 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதி கோகோய், கன்வில்கர், மல்ஹோத்ரா ஆகியோர் பரிந்துரை செய்தனர். ஆனால், நாரிமன், சந்திரசூட் ஆகியோர் எதிரான தீர்ப்பை வழங்கினர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
14-நவ-201915:29:19 IST Report Abuse
konanki நிஷா ரதி அவர்களே கவலை பட வேண்டாம். பெண்களுக்கு வேறு (மத )கோயில்கள், மசூதிகள் கட்டுப்பாடு விதிப்பது தவறு என்று தீர்ப்பு வருவதற்கு இன்றைய சூழ்நிலையில் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
14-நவ-201915:24:52 IST Report Abuse
konanki //பெண்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது சபரிமலையில் மட்டும் அல்ல வேறு கோயில்கள், மசூதிகளிலும் உள்ளது.//. பெண்களுக்கு சபரி மலையில் கட்டுப்பாடு விதிப்பது தவறு என்று போராடிய ms கனிமொழிஅவர்கள், கவிஞர் ஷாஹுல் ஹமீது (மனுஷ்ய புத்திரன்), கேரளா முதலமைச்சர் திரு பின்றாய் விஜயன் அவர்கள், இந்தியாவிலே அறிவில் சிறந்த தமிழ் நாட்டின் ஊடக நெறியாளர்கள், திரு வீரமணி அவர்கள் பெண்களுக்கு மசூதிகளில் கட்டுப்பாடு விதிக்க கூடாது என்று இந்த ஏழு நீதிபதி அமர்வக்கு முன் புதிய மனு போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்வோம் .
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201914:32:29 IST Report Abuse
நக்கல் கோவில், கடவுள் எல்லாம் நம்பிக்கை அடிப்படையில் இருப்பது.. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அங்கு என்ன வேலை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X