சபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி : சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யும் மனு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கை 7 நீதிபதிகள் அமர்விற்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.








வழக்கு கடந்து வந்த பாதை :



1991 : சபரிமலை கோயிலில் 10முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிப்பதில்லை என்ற விதிமுறையை விலக்க வேண்டும் எனக் கோரிய வழக்கை நிறுத்தி வைத்தது.அதே ஆண்டு இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மத நம்பிக்கையின் படியும், கேரள கோயில்கள் வகுத்த விதியின்படியும், சபரிமலை தேவஸ்தான விதியின் படியும் இத சரியாகாது என கூறப்பட்டது.

2006 : இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

2007 : அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்காதது ஏன் என கேள்வி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு ஆதரவாக கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

2008 : 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்விற்கு மாற்றப்பட்டது.





2016 : மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

2017 : 5 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டது.

2018 செப்.,28 : சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

2018 அக்.,17 : 10-50 வயதிற்கு உட்பட்ட பல பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்கள் போராட்டத்தால் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

2018 அக்.,21 : பக்தர்களின் போராட்டத்தையும் மீறி, போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் 3 பெண்கள் சன்னிதானத்திற்கு செல்லும் நடைபந்தல் வரை அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் பக்தர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால், அந்த பெண்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

2019 ஜன.,2 : 40 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள், மாறுவேடத்தில் கோயிலுக்குள் சென்று, சாமி தரிசனம் செய்தனர்.

2019 பிப்.,6 : சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவை சீராய்வு செய்யும் படி 50 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.



2019 நவ.,14 : சீராய்வு மனு மீதான விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14-நவ-201913:47:15 IST Report Abuse
Yaro Oruvan நாலஞ்சு வருஷம் கழிச்சி 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாத்தீருங்க எசமான்.. அதுக்கப்புறம் 11, 13, 15 இப்படி ஸ்டெப்பை ஸ்டெப்பா போயி கடசியில 2999 ல அனைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் ஒண்ணா ஒரே பெஞ்சுல ஒக்காந்து தீர்ப்பு சொல்லுங்க எசமான்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X