தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பாஜ., சார்பில் போட்டி| Dinamalar

தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பாஜ., சார்பில் போட்டி

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (13)
பா.ஜ., கர்நாடகா, எம்.எல்.ஏ., எம்எல்ஏ, எடியூரப்பா

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏ.,க்களில் 15 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர். இவர்களில் 13 பேர் இடைத்தேர்தலில் பாஜ., சார்பில் போட்டியிடுகின்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் இரு கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அவர்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஜூலையில் தகுதி நீக்கம் செய்தார்.
இதனால் பெரும்பான்மை இல்லாததால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. சபாநாயகர் முடிவை எதிர்த்து 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் இன்று (நவ.,13) தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், 17 எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்கம் செல்லும் என அறிவித்தது.




இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.,க்களில் 15 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில், அவர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர். அவர்களில் 13 பேர் டிச.,5ல் நடக்கும் இடைத்தேர்தலில் பாஜ., சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X