ஒரு கையில் பெப்பர், மறு கையில் பேப்பர்; அதிகாரிகள் நிலை மாறாதா

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (16)
Advertisement
பேப்பர், பெப்பர், மிளகு, தாசில்தார், தெலுங்கானா, கொலை,

இந்த செய்தியை கேட்க

ஐ தராபாத்: தெலுங்கானாவில் தாசில்தார் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு அதிகாரிகள், பாதுகாப்பிற்காக ஒரு கையில் மிளகு பொடியும் மற்றொரு கையில் அலுவலக பேப்பர்களையும் வைத்துக்கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். தங்கள் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

தெலுங்கானாவில் உள்ள அப்துல்லா பூர்மெட் பகுதியை சேர்ந்த பெண் தாசில்தார், விஜயரெட்டி என்பவர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற டிரைவர் குருநாதமும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு அனைத்து அதிகாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தாசில்தார் ஒருவர், அலுவலகத்தில் கயிறு கட்டி வேலை பார்த்தார். இந்நிலையில், சிரிசில்லி என்ற இடத்திலும் ஒருவர், பெட்ரோல் டின்னுடன், துணை தாசில்தாரை எரிக்க வந்த சம்பவம் அவர்களின் பயத்தை அதிகரித்துள்ளது.எனவே, அவர்கள் அனைவரும், தற்காப்பிற்காக, தங்கள் கையில் மிளகு பொடியுடன் பணிக்கு சென்று வருகின்றனர்.


இதனையடுத்து, எங்கள் பாதுகாப்பிற்கு தினமும் மிளகு பொடியை தினமும் கொண்டு வர முடியுமா? எங்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு மவுனம் சாதிக்கிறது என பல அதிகாரிகள், தங்கள் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.


விதவை பென்சன்


இதனிடையே, தாசில்தார் விஜயா ரெட்டியை காப்பாற்ற முயன்ற அவரது டிரைவர் குருநாதம் மனைவி சவுந்தர்யாவுக்கு, விதவை பென்சன் வழங்க, சூரியாபேட்டை ஆர்டிஓ மோகன் ராவ் உத்தரவிட்டுள்ளார். சவுந்தர்யாவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அளித்த மனுவை பரிசீலனை செய்த அதகாரிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thulasiraman Ramanujam - vellore,இந்தியா
14-நவ-201916:42:42 IST Report Abuse
Thulasiraman Ramanujam but mind only on bribe.will they change?
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201916:39:23 IST Report Abuse
ARUN.POINT.BLANK ஒரு போலிஸ் நல்லது செஞ்சாருன்னு ஊர் மக்கள் அவரை மாற்றக்கூடாதுனு போராடினாங்க... நல்லது செஞ்ச யாரு எரிக்க போறாங்க?? லஞ்சம் பேராசை அதான் கொள்ளி வெச்சான்...
Rate this:
Share this comment
Cancel
TechT - Bangalore,இந்தியா
14-நவ-201915:44:55 IST Report Abuse
TechT பட்ட மற்ற அரசு செலவு வெறும் 2000 என்றால் இவர்கள் 15000 லஞ்சமாக மட்டுமே கேட்பார்கள், இப்போது புது டெக்னீக், பக்கத்துல மஞ்சன் மாமன் எவனாவது இருப்பான் அவனுடன் பொய் லஞ்சப்பணம் குடுக்கணும் அவன் இவனுக்கு போன் சித்து சொல்வான் பின்னர் வேலை ஆகும், இப்படி செய்து நேரடியாக மாட்டாமல் தப்பிக்கிறார்கள். பல vao, clerk, etc., சும்மானாச்சும் இதுல பங்கு மேல்மட்டக் வரை போகுது அது இதுனு பொய் சொல்லி கொள்ளை அடிக்கிறார்கள். அரசர்கள் spy போன்று honeytrap பணம் கொடுத்து இவர்களை பிடிக்க வேண்டும் , மேலும் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், ஊழல் அரசியல்வாதிகளை விட இவர்கள் கொடுமையானவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X