அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்; மு.க.அழகிரி ஆரூடம்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (31)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில் தலைவருக்கான வெற்றிடம் இருக்கிறது அதை ரஜினி தான் நிரப்புவார் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.





சமீபத்தில் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினி, தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னமும் இருக்கிறது என கூறினார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் வெற்றிடத்தை முதல்வர் இபிஎஸ் நிரப்பிவிட்டார் எனவும், திமுக பொருளாளர் துரைமுருகன், வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் எனவும் மாறி மாறி கூறி வந்தனர்.
வெற்றிடம் குறித்து ரஜினி கூறி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆனாலும், இன்னும் அதன் பேச்சு இருந்து வருகிறது. இது குறித்து மு.க.அழகிரியிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மை தான். ரஜினி வருவார், அந்த வெற்றிடத்தை நிரப்புவார் எனக்கூறினார்.




முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகனான அழகிரி, கருணாநிதியை தவிர யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் எனக் கூறி வந்தார். அவரின் இறப்பிற்கு பின், தற்போது தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என கூறியது, திமுக கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் அழகிரி இணைவாரா அல்லது திமுக.,வை வெறுப்பேற்ற ரஜினி பக்கம் பேசுகிறாரா என்பது தெரியவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-நவ-201904:05:56 IST Report Abuse
Rajagopal ரஜனி கட்சில சேரணும்னா அழகிரி பழனில போயி மொட்டை அடிச்சி, திருச்செந்தூர்லக் காவடி ஆடியாவணும். அப்பத்தான் தீமூகவிலேந்து பட்டத் தீட்டுப் போவும்.
Rate this:
Share this comment
Cancel
Laxmanan Mohandoss - ambur,இந்தியா
14-நவ-201922:58:58 IST Report Abuse
Laxmanan Mohandoss Rajini does not have ability or vision to fulfill the vacuum neither any actor including Kamal
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201920:01:18 IST Report Abuse
ஆப்பு கூத்தாடிகள் விட்டுச் சென்ற வெற்றிடம். நிரப்ப அவிங்களாலேயே முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X