ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: ரவிசங்கர் பிரசாத்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (16)
Advertisement
ரபேல், காங்கிரஸ், ராகுல், ரவிசங்கர் பிரசாத், காங்., பாஜ, ஸ்மிருதி இரானி

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ரபேல் மறுசீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, ரபேல் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் பொய் கூறியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ரபேல் விவகாரத்தில் ராகுல் பொய் சொல்லியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகளை பிரான்ஸ் அதிபர் மேக்ரன் கூட நிராகரித்துள்ளார். அரசின் வெளிப்படை தன்மையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ரபேல் போர் விமானங்களின் விலை குறித்து ராகுல், நாட்டை தவறாக வழிநடத்தினார். ஒவ்வொரு கூட்டத்திலும் விமானங்கள் குறித்து பொய் சொல்லி வந்தார். இதன் மூலம், ரபேல் விவகாரத்தில் நாட்டைதவறாக வழிநடத்தினார். யாருக்காக இந்த பொய் பிரசாரத்தை ராகுல் மேற்கொண்டார். பொய் சொன்னதற்காக அவர்ர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.




காங்கிரசும் பொய் சொன்னதுடன், பிரதமருக்கு எதிராக அவதூறு பிரசாரம் மேற்கொண்டது. இந்திய விமானப்படைக்கு புதிய விமானங்கள் தேவைஎன்பதை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றம் உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. அரசின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டது.





மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்ட டுவிட்டர் பதிவு: தேச பாதுகாப்பிற்காக பிரதமர் மோடி மற்றும் அரசு கொண்டள்ள உறுதியை நீதிமன்றம் மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளது. இனிமேல், காங்கிரஸ் கட்சியும், ராகுலும் பொய் சொல்வதை விட்டுவிட்டு, நாட்டை கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த பங்களிப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
14-நவ-201919:41:12 IST Report Abuse
Sampath Kumar இதை கார்கில் சவ பெட்டி ஊழலில் நீங்க சொல்லுவீங்க ல சார் ?
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
14-நவ-201918:17:56 IST Report Abuse
தாண்டவக்கோன் உண்மய வெளீல சொல்லாததுக்கு பிரசாது &கூட்டந்தான் மன்னிப்பு கேக்கணும்
Rate this:
Share this comment
Cancel
Raghunathan - Bangalore,இந்தியா
14-நவ-201916:44:51 IST Report Abuse
Raghunathan அது என்னமோ தெரியலை கமெண்ட்ஸ் எல்லாம் பிஜேபிக்கு சாதகமாகவே பப்லிஷ் ஆகுது. ஆனா பிஜேபி வோட்டு மட்டும் நோட்டாவுக்கு கீழே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X