ரபேல் தீர்ப்பு : விஐபி.,க்கள் என்ன சொல்கிறார்கள்?| Dinamalar

ரபேல் தீர்ப்பு : விஐபி.,க்கள் என்ன சொல்கிறார்கள்?

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (17)

புதுடில்லி : ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக முகாந்திரம் இல்லை என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதே போன்று பிரதமர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக காங்., எம்.பி., ராகுல் மீது தொடரப்பட்ட வழக்கில், ராகுலை எச்சரித்த சுப்ரீம் கோர்ட், வழக்கை முடித்து வைத்தது.






இந்நிலையில் இந்த வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புக்கள் குறித்து விஐபி.,க்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் :

பா.ஜ., தலைமை : ரபேல் விவகாரம் தொடர்பாக தவறான தகவல் அளித்ததற்காக நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ராஜ்நாத் சிங் : சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். நமது அரசின் நிலைப்பாட்டை இது நியாயப்படுத்தி உள்ளது. நமது அரசின் வெளிப்படை தன்மையான செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட் அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு துறை தொடர்பான விஷயங்கள் அரசியலாக்கப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். சிலர் தங்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக இதை பயன்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் பிரதமர் மீது அவதூறு கூறி உள்ளனர். குறிப்பாக சில மூத்த காங்., தலைவர்களாலேயே இது நடந்துள்ளது.




மாஜி விமானப்படை அதிகாரி பி.எஸ்.தனோவா : எங்களின் கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். 2018 டிசம்பரில், சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ள இதே தீர்ப்பை நான் வாக்குமூலமாக அளித்திருந்தேன். ஆனால் அப்போது சிலர், நான் அரசியலுக்காக பயன்படுத்தப்படுவதாகவும், தவறான கருத்தை கூறுவதாகவும் தெரிவித்தனர். தற்போது இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக சில கருத்துக்கள் சொல்லப்பட்டது தவறு.

பா.ஜ., செயல் தலைவர் ஜெ.பி.நட்டா : இந்த விவகாரத்தில் சாலை முதல் பார்லி., வரை ராகுலும் அவரது கட்சியும் நாட்டை தவறாக வழிநடத்த முயற்சித்தனர். ஆனால் உண்மை வெளிப்பட்டுள்ளது. ராகுல் தொடர்ந்து நாட்டிலேயே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X