ஆவின் நெய்யில் அக்மார்க் முத்திரைக்கு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆவின் நெய்யில் 'அக்மார்க்' முத்திரைக்கு தடை

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (2)
Aavin, Ghee, Agmark, ஆவின், நெய், அக்மார்க், முத்திரை, தடை

சென்னை: ஆவின் நெய் உள்ளிட்ட 66 உணவு பொருட்களுக்கு அக்மார்க் தர முத்திரை பயன்படுத்த மத்திய வேளாண்துறையின் கீழ் செயல்படும் சந்தைபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு இயக்ககம் தடை விதித்துள்ளது.

விவசாய பண்ணைகளில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களில் கலப்படம் இல்லை என்ற தரச்சான்றிதழே அக்மார்க் முத்திரை. இதுவரை, இந்தியா முழுவதும் அரிசி, பருப்பு, தேன், எண்ணெய் உள்ளிட்ட 225 விவசாய பொருட்களுக்கு அக்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஆவின் உள்ளிட்ட 33 நிறுவனங்களை சேர்ந்த 66 உணவுப் பொருட்களுக்கு அக்மார்க் முத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.




அக்மார்க் தர சான்றிதழை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இந்த 33 நிறுவனங்கள் 66 பொருட்களுக்கு புதுப்பிக்காததால், அந்த பொருட்கள் மட்டும் அக்மார்க் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆவின் நெய்க்கான அக்மார்க் தரச் சான்றிதழ் இன்னும் காலாவதியாகவில்லை எனவும், புதுப்பிக்க 2023ம் ஆண்டு வரை கால அவகாசம் இருப்பதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X